FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: CybeR on October 18, 2014, 11:40:21 AM

Title: அம்மா
Post by: CybeR on October 18, 2014, 11:40:21 AM
சுடச்சுட உணவு இருந்தால்,

தாத்தா அதிகம் சாப்பிடுவார் !!

அம்மா உணவு பரிமாறினால்

அப்பா அதிகம் சாப்பிடுவார் !!

தூக்கி வைத்துக்கொண்டு
உணவு ஊட்டினால்

தங்கை அதிகம் உண்ணுவாள் !!


தொட்டுக்கொள்ள ஏதேனும் இருந்தால்
தம்பி அதிகம் சாப்பிடுவான் !!

சமைத்தது மீதமானால் மட்டுமே
அம்மா அதிகம் சாப்பிடுவாள!!

உண்மைதானே??
Title: Re: அம்மா
Post by: CuFie on October 18, 2014, 02:07:16 PM
cybee seme semee