FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on October 17, 2014, 04:32:35 PM

Title: முத்துச் சிதறல்கள்
Post by: thamilan on October 17, 2014, 04:32:35 PM
          கைதி
நட்பு எனும் சிறையில்
நான்
ஆயுள் கைதி
 


           காவல்
சிலைக்குக் கூட
இரும்பு வேலியால் சிறை........ காவல்  


        அவமானம்

சாதனையாளனுக்குக் கிடைக்கும்
முதல் பரிசு
 


            விலைமகன்  
சீதனம் வாங்கும்
ஒவ்வொரு ஆண்மகனும்
 

             துறவிகள்  
திரு வோடு ஏந்தி
திருவோடு வாழ்பவர்கள்
 

            காதல்  
நம்மை நாமே
மறக்கச் செய்யும் ஒரு வித
அம்னீசியா நோய்
 

            வாழ்க்கை  
நாம் தொலைத்து விட்டு தேடும்
ஒரு வித
கண்ணாமுச்சி விளையாட்டு
 
Title: Re: முத்துச் சிதறல்கள்
Post by: aasaiajiith on October 18, 2014, 11:38:27 AM


தொடர்ந்து எழுதவும் !!

வாழ்த்துக்கள் !!
Title: Re: முத்துச் சிதறல்கள்
Post by: CuFie on October 18, 2014, 02:21:56 PM
guru ji pinrel pongol