FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on December 13, 2011, 11:03:32 PM

Title: காலம் செய்யும் கட்டாய மாற்றம்.....
Post by: Global Angel on December 13, 2011, 11:03:32 PM
காலம் செய்யும் கட்டாய மாற்றம்.....  

காதல் கரைந்து போகும்

அதென்ன மெழுகுவர்த்தியா ? !!

காலம் பதில் சொல்லும் !!!

அதென்ன கோனார் புத்தகமா !!!!

* * * * * * * * *


ஒரு காலத்தில்
என் தாய் இறக்க போகிறார்
என கேட்க்கும் முன்
நான் இறப்பேன் என
முடிவு செய்ததுண்டு


என் தந்தை மரித்தால்
நான் எப்படி அதை தாங்கி கொள்வது
அதனால் நானும் இறந்து விடுவேன்
எனக்குள் நானே சொல்லிகொள்வதுண்டு

காதலன் பிரிந்த போது
இருதயம் நொறுங்கி பித்து
பிடித்த போது
இனி என்ன செய்வேன் என்று
திக்கு தெரியாத
மன நிலையிலே இனி
வாழ்க்கையே முடிந்து விட்டது
என கொடிய வேதனை
அடைந்ததுண்டு

காலங்கள் நூல் நெய்கிறவன்
நாடாவைவிட அதி வேகமாக
ஓடுகிறதே...

இப்போதும் நான் வாழ்ந்து
கொண்டுதானே இருக்கிறேன்
நினைத்துப் பார்த்தால்
எல்லாமே ஒரு நீண்ட
பழைய கனவாய்
நினைவிற்கு வருகிறதே

அன்று எனக்கேற்ப்பட்ட காயங்கள்
இன்று மங்கலாய் தெரிகிறதே அதில்
அன்றைய வலி இன்று இல்லையே

காலம் என்பது வாழ்வில்
ஒரு மாமருந்து தானோ

தீராத வலிகளையும் காயங்களையும்
ஆற்றும் ஒரு அறிய மருந்து
காலம் மட்டும் தான்
அன்றைய பல கேள்விகளின்
இன்றைய பதில்களாய் கூட
இந்த காலம் நம்முடன்
ஒரு மொவ்ன மொழி
பேசுகிறதே

காலம் செய்யும் இந்த
அரிய மாற்றங்கள் தான்
எத்தனை !! எத்தனை !!

ஆம் !! காதலும் கரைந்து போனது
காலமென்னும் காற்றினால்.



padithathil pidithathu
Title: Re: காலம் செய்யும் கட்டாய மாற்றம்.....
Post by: ஸ்ருதி on December 14, 2011, 05:40:27 AM
ஆம் !! காதலும் கரைந்து போனது
காலமென்னும் காற்றினால்.

நச்சுனு இருக்கு இந்த வரிகள்  ;) ;) ;)