FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on December 13, 2011, 06:35:14 PM
-
படித்ததில் பிடித்தது!
இருதயம் தாண்டி
இறுக்கம் இறுக்கியிருக்கும்
இன்னலிலும் தேடிவந்து பங்குபோடும்
எதுவரை சென்றபோதும் கூட வரும்
என்ன ஆனாலும் கைகோத்திருப்பேன் உறுதிதரும்
அணைத்து நின்ற சொந்தங்கள்
அக்குவேராய் ஆணிவேராய்
அகழும் தருணம் –அவ்வேதனையை
தாங்காத நெஞ்சம்
தனிமையில் சிதைந்து வாடும்
வரவுகளின் எடை கொண்டே
வருகைகளின் எடை அதிகரிக்கும்
வரவில் கொஞ்சம் சரியல் கண்டால் –தூர
விலகியிருந்தே விசாரிக்கும்
விரும்பிய விழிகள் கூட
வெருப்பைக் கக்கும்
வேண்டாமிந்த உறவு என்றே
வெருண்டோடிப் போகும்
ஏற்ற இறக்கம் காணாத்துபோல
ஏளனம் பேசும்
ஏனென்று கேட்கக்கூட திராணியற்க்கும்
ஏறுமுகம் ஒன்றேதான்
ஏற்றமென்று சாடை பேசும்
ஒன்றுமில்லையென்று அறிந்தபின்னே
ஒன்றுகூடி எள்ளி நகையாடும்
ஒட்டுவுறவெல்லாம் சட்டென விலகியோடும்
உறவுகள்கூட மெல்லமெல்ல கலைந்துபோகும்
உதவிகள் செய்யக்கூட அஞ்சும் நெஞ்சம்
உபத்திரம் செய்வதற்கோ ஓடோடிவரும்
காசேதான் கடவுளென்று அடித்துபேசும்
கடன் கேட்டுவிட்டால்
கண்ணைச் லேசாய் சுணங்கிக் காட்டும்
பாசங்கள்கூட வேசம்போட்டு மோசம் செய்யும்
பச்சோந்திகளாக மாறி மாறி நடித்துக் காட்டும்
எச்சக் கையை உதறினால் தானே
கூடும் காக்காய் கூட்டம்
ஏதுமில்லையென்றால்
எவ்வளவு பெரிய மனிதரானாலும்-வெரும்
கூடாய் அலையும் உணர்வற்ற ஜடம்...
அன்புடன் மலிக்கா
இறைவனை நேசி இன்பம் பெறுவாய்..
-
மச்சி நல்லாத்தான் இருக்கு ஆனா ரொம்ப பெருசா இருக்கு படிச்சு புரியிறதுக்கு 1 மணிநேரம் ஆகும் போல
-
பொறுமையா படிச்சா நல்ல புரியும் கேட்டவன் மச்சி! ;D ;D
-
ம்ம் நன்று யூசுப்
பாசத்தில் கூட வேஷம் போடும் உலகம் இது
-
இந்த பாராட்டுக்கள் அணைத்து சகோதரி மலிக்கா அவர்களுக்கு மட்டுமே!
நன்றி!
-
unmai than mams paasaththil kooda kalapadam than ipa elam
nala karuthulla kavithai
pagirvukku nantri
-
நன்றி ரெமோ!