FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Little Heart on October 07, 2014, 11:17:13 AM

Title: சந்திரனின் சுவாரசியங்கள்
Post by: Little Heart on October 07, 2014, 11:17:13 AM
இவ்வளவு நாட்களும் நான் எனது அறிவு டோஸ்களில் புவி, சூரியன், நட்சத்திரங்கள் பற்றி எழுதி இருக்கின்றேன், ஆனால், நமது புவியின் துணைக்கோள் ஆகிய சந்திரன் பற்றி ஒன்றுமே எழுதியதில்லை! எனவே, இதோ சில சுவாரசியமான தகவல்களைத் தருகிறேன், படித்துப் பாருங்கள்.

4,600,000,000 வருடங்களுக்கு முன்பு உருவான சந்திரன், அந்நேரம் புவியில் இருந்து 22,530 km தூரத்தில் தான் இருந்தது. ஆனால் காலம் போகப் போக அந்தச் சந்திரன் புவியை விட்டு விலகி இன்று ஏறத்தாழ 384.000 km தூரத்தில் இருக்கின்றது. புவியில் காணப்படும் ஓதம் என்று அழைக்கப்படும் நீர்மட்டம் உயர்ந்து தாழ்வது கூட சந்திரனின் ஈர்ப்புச் சக்தியால் தான் ஏற்படுகின்றது. ஆனால், சந்திரனால் புவியில் ஏற்படும் விளைவு இது மட்டும் இல்லை, மேலும் புவியின் சுழற்சியின் வேகம் கூட மெதுவாக்கப் படுகிறது. ஒவ்வொரு 1000 வருடங்களுக்கும் புவியின் சுழற்சியின் வேகம் 0,0015 நொடிகளுக்கு குறைக்கப் படுகிறது.

உங்களில் யாராவது உங்கள் நிறை அதிகமாக இருக்கிறது என்று கவலைப்பட்டால் சந்திரனில் போய் உங்கள் நிறையை அளந்து விடுங்கள். சந்திரனின் ஈர்ப்பு விசை புவியீர்ப்புவிசை உடன் ஒப்பிடும் போது ஆறில் ஒரு பங்காக இருப்பதால், 120kg நிறையைக் கொண்ட ஒருவர் சந்திரனில் 20 kg தான் இருப்பார். இதை விட இன்னும் ஒரு சுவாரசியமான விடயம் என்ன தெரியுமா? நமது சந்திரன் பந்து போன்ற வடிவம் கொண்டது என்று நீங்கள் நினைத்தால் அது தவறு. உண்மையில் அதனது வடிவம் முட்டை போல் தான் இருக்கிறது! இது எப்படி…?