FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Little Heart on October 07, 2014, 11:16:46 AM
-
நீங்கள் எல்லோருமே வெளிநாடு ஒன்றிற்கு உல்லாசப் பயணம் சென்றால் அந்நாட்டில் இருந்து உங்கள் நண்பர்களுக்கு ஓர் அஞ்சலட்டை (postcard) அனுப்பி இருப்பீர்கள், சரி தானே? இதே போன்று தான் 1977ம் ஆண்டிலும் விண்வெளி ஆய்வு அமைப்பாகிய நாசா (NASA) ஓர் விசேஷமான அஞ்சலட்டை அனுப்பி இருந்தது. அதுவும் புவியில் வாழும் ஒருவருக்கு அல்ல, விண்வெளியில் வாழக்கூடிய வேற்றுலக உயிரிகளுக்கு (alien) அனுப்பப் பட்டது. 1977ஆம் ஆண்டில் ஏவப்பட்ட வொயேஜர் 1 மற்றும் வொயேஜர் 2 (Voyager 1, 2) எனப்படும் விண்கலங்கள், விண்வெளியில் வாழக்கூடிய உயிரிகளுக்கு, புவியின் பல்லினங்கள் மற்றும் பண்பாடுகளை ஒரு தகவலாக கொண்டு செல்கின்றன. இத்தகவல் தங்கம் மற்றும் செப்பினால் செய்யப்பட்ட ஓர் 30cm பெரிதான சீ.டீ. ஒன்றில் பதிக்கப்பட்டுள்ளது.
இந்தத் திட்டத்தின் அறிவியல் அறிஞரான டாக்டர் கார்ல் சாகனும் (Carl Sagan) அவரது குழுவும் மொத்தமாக 115 படங்கள், இயற்கையில் காணப்படும் ஒலிகள், வெவ்வேறு பண்பாடுகளின் இசைகள் மற்றும் 55 மொழிகளில் வணக்கங்களையும் இணைத்துள்ளனர். இன்று நமது சூரியனிலிருந்து வொயேஜர் 1 18,900,000,000 km மற்றும் வொயேஜர் 2 15,300,000,000 km தூரத்திற்குச் சென்றுவிட்டது. சரி, பொறுத்திருந்து பார்ப்போமே! எதிர்காலத்தில் தற்செயலாக ஏதாவது ஒரு விண்வெளி உயிரி இந்த சீ.டீ. ஒன்றை கண்டெடுத்து நமது புவியை நோக்கி வருவார்களோ தெரியாது.
அது சரி, டாக்டர் கார்ல் சாகன் உங்களிடம் வந்து விண்வெளியில் வாழும் அந்த உயிரினங்களுக்கு வணக்கத்திற்குப் பதிலாக ஓர் செய்தி கூறச் சொன்னால் என்ன செய்தி அனுப்பி விடுவீர்கள்?