FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Yousuf on December 13, 2011, 05:09:50 PM

Title: காலம்!
Post by: Yousuf on December 13, 2011, 05:09:50 PM
நான் ரசித்த கவிதை!

நிகழ்வுகளை
நினைவுகளாய்ப்
பதிந்து வைக்கும்
ஒலிநாடா

இன்றைய செய்திகளை
நாளைய வரலாறுகளாய்ப்
பாதுகாத்து வைக்கும்
பேரேடு


துக்கங்கள் யாவும்
மறந்து போக வைக்கும்
மாமருந்து

வாய்ப்புகளாய்
வாசற்கதவினைத் தட்டும்
உருவமில்லா ஓர்
உற்ற நண்பன்

காத்திருத்தல்
தவப் பயனாய்
பொறுமை தரும்
வரம்

மேலும் கீழுமாய்ச்
சுழற்றிப் போடும்
சக்கரம்

பிறப்பு, இறப்பு
மறுமை யாவும்
மறைத்து வைத்துள்ள
இரகசியப்
பெட்டகம்


-  'கவியன்பன்' கலாம்
Title: Re: காலம்!
Post by: RemO on December 13, 2011, 05:28:37 PM
nala kavithai mams
kaalam anaiththaiyum maaththum
Title: Re: காலம்!
Post by: Yousuf on December 13, 2011, 05:32:20 PM
நன்றி ரெமோ மாம்ஸ்!
Title: Re: காலம்!
Post by: KettavaN on December 13, 2011, 07:44:54 PM
 :)மச்சி இது எங்க இருந்து சுட்டுடு வந்தனு என்கிட சொல்லு நானும் அங்க போய்டு சுட்டுடு வந்திடுறேன்  ;) ;)
Title: Re: காலம்!
Post by: Yousuf on December 13, 2011, 08:15:10 PM
உன் கிட்ட அத நான் சொல்லிட அப்புறம் நான் எங்க இருந்து சுட்ராது கேட்டவன் மச்சி! ;D ;D ;D
Title: Re: காலம்!
Post by: ஸ்ருதி on December 14, 2011, 05:51:49 AM

வாய்ப்புகளாய்
வாசற்கதவினைத் தட்டும்
உருவமில்லா ஓர்
உற்ற நண்பன் :) ;) ;) ;) ;)


superrrrrrrrrrr
Title: Re: காலம்!
Post by: Yousuf on December 14, 2011, 03:06:56 PM
நன்றி!