FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Arul on October 03, 2014, 12:22:06 AM
-
வருத்த பட ஒன்றுமில்லை
இனி வாழ்வு தான் எனக்கு இல்லை
நிம்மதியாய் நீ உறங்கு
நிரந்தரமாய் நான் உறங்குகிறேன்
வலிகளையே வாழ்க்கையாய்
வாழ்ந்துவிட்ட எந்தனுக்கு
வலிகள் என்றும் புதியதில்லை
இனி வலிகளே வேண்டாமென்று
வெறுத்து விட்ட என் மனது
என்றுமே திரும்பாத
வேறு உலகை தேடி தான்
மௌனமாய் பயணிக்கிறது ..... தேடாதே என் உயிரே .....