FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Maran on October 02, 2014, 08:12:59 PM

Title: தேடல்
Post by: Maran on October 02, 2014, 08:12:59 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fi1319.photobucket.com%2Falbums%2Ft668%2FMaran2525%2FPoem%2Fthedal_zpslpzg6qkd.png&hash=e8b866d708fdff066ef22dcd4005b972243b96dd)
Title: Re: தேடல்
Post by: Maran on November 10, 2016, 06:17:22 PM



நியாயங்கள்
எல்லோருக்கும்
பொதுவானதாகவே இருக்கின்றன...
நியாயப்படுத்தல்கள் தான்
ஆளாளுக்கு மாறுபடுகின்றன!




Title: Re: தேடல்
Post by: AnoTH on November 11, 2016, 12:48:15 PM


தேடல் என்பது ஒவ்வொரு மனிதனுக்கும்
இருக்க வேண்டிய முக்கியமான விடயம்.
சிலர் தொலைத்து விட்ட நினைவுகளை
தேடுவார்கள் சிலர் தொலைந்து போன
உறவுகளை தேடுவார்கள், ஆனால்
ஒரு சிலரே ஓர் விடையின் கேள்விக்கான
தேடுதலை மேற்கொள்கிறார்கள்.
இந்தக்கவிதையும் அத்தகைய அம்சமே
மிக அழகான கவிதை சகோதரன் மாறன்.

வாழ்த்துக்கள்
Title: Re: தேடல்
Post by: Maran on November 11, 2016, 07:45:57 PM




மிக்க மகிழ்ச்சி அனோத் தங்கள் வருகையிலும் கருத்திலும் உளம் நனைந்தேன்.....




Title: Re: தேடல்
Post by: BlazinG BeautY on November 12, 2016, 09:27:42 AM
வணக்கம் தோழா , அருமையாக அற்புதமாக இருக்கு உங்கள் கவி. இன்னும் உங்கள் கவிதைகளுக்காக காத்திருக்கும் நண்பர்கள். 
Title: Re: தேடல்
Post by: ரித்திகா on November 12, 2016, 04:04:38 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.gifmania.co.uk%2FPlants-Animated-Gifs%2FAnimated-Flowers%2FFlower-Lines%2FRoses-Web-Divider-89658.gif&hash=53bd2ea50fdd5fe417918122e58af24c5b500837)

வணக்கம் தோழன் மாறன் அவர்கள் ....

தேடலில் ஆரம்பித்த வாழ்க்கை ....
தேடலிலே முடிவுறுகிறது ...
ஆனால் தேடிய தேடலுக்கு இதுவரை
யாருக்கும் பதில் கிடைத்தவார்தான் இல்லை ....

அருமையான கவிதை தோழா ....
சிந்தனை சிறப்பு ....
தொடரட்டும் கவிப்பயணம் .....
எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் ....!!!!

~ நன்றி !!! ~
!! தோழி ரித்திகா !!

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.picgifs.com%2Fglitter-gifs%2Fh%2Fhello-kitty%2Fpicgifs-hello-kitty-9270171.gif&hash=8748ce13ab86f98c3c12c909e0f5c86b287e1734)
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.gifmania.co.uk%2FPlants-Animated-Gifs%2FAnimated-Flowers%2FFlower-Lines%2FRoses-Web-Divider-89658.gif&hash=53bd2ea50fdd5fe417918122e58af24c5b500837)
Title: Re: தேடல்
Post by: SweeTie on November 12, 2016, 09:38:46 PM
கண்டிப்பா  நீங்களும் அந்த அதிர்ஷ்டசாலிகளில் ஒருவர்தான்.  சந்தேகம் வேண்டாம்.   வாழ்த்துக்கள்
Title: Re: தேடல்
Post by: Maran on November 13, 2016, 05:56:04 PM



Blazing Beauty, Rithika, Sweetie தொடர் வருகைக்கும் கருத்துக்கும் என்றும் நன்றி நட்புகளே..

என் கவிதையை உள்வாங்கி ரசித்துக் கருத்திட்டத்தில் மட்டற்ற மகிழ்ச்சி, வாய்ப்பளித்தமைக்கு நன்றி...




Title: Re: தேடல்
Post by: LoLiTa on November 15, 2016, 04:34:48 PM
Kavinyare as usual superb!
Title: Re: தேடல்
Post by: Maran on November 17, 2016, 05:58:09 PM




மிக்க மகிழ்ச்சி தோழி லலிதா... நன்றி.  :)




Title: Re: தேடல்
Post by: SarithaN on December 10, 2016, 05:18:08 PM
வணக்கம் தோழா மாறா?

உங்கள் கவிதை எனை எதையோ
தேட சொல்கிறது
எங்கோ படித்த கவிதையோ
இல்லை உணர்வோ
என்னை பிசைகிறது,

முதல் மரியாதை
படத்தின் பூங்காற்று திரும்புமா பாடல்
கேட்கையில் எதுவென தெரியாமல்
என்னவென்று புரியாமல் மனது அழும்

அப்படி ஏதோ ஒன்று உள்ளோ நுழைகிறது

சிலருக்கு தேடலே வாழ்வாகும் விடையற்று!

வாழ்த்துக்கள், கவிதை ஆழ்மனத்தின் ஊற்று.

நன்றி
வாழ்க வளமுடன்
Title: Re: தேடல்
Post by: Maran on December 10, 2016, 06:37:33 PM



மிக்க மகிழ்ச்சி நண்பரே! தங்கள் முதல் வருகையிலும் கருத்திலும் உளம் நனைந்தேன்.