FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Nancy on December 13, 2011, 02:03:14 PM

Title: உன் காதல்
Post by: Nancy on December 13, 2011, 02:03:14 PM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fimages2.alphacoders.com%2F796%2Fthumbbig-79686.jpg&hash=6bbdb4a1fe9eb0a85ec99cb69fb1eea3a9ccea78)

காதலுக்கு மொழி தேவையில்லை
காதலுக்கு ஜாதி தேவையில்லை
காதலுக்கு மதம் தேவையில்லை
காதலுக்கு உறவு தேவையில்லை

ஆனால்
காதலுக்கு அன்பு தேவை
காதலுக்கு பண்பு தேவை
காதலுக்கு மனம் தேவை
காதலுக்கு உறுதி தேவை

இவை அனைத்தையும் உன்னில்
கண்டேன் அன்பே
அப்போது புரிந்து கொண்டேன்
நீ என்னில் வைத்து இருப்பது
நேசம் கடந்த பாசம் என்பதை

உனக்காக எதையும் இழப்பேன்
எதற்காவும் உன்னை இழக்கமாட்டேன்
நீ சொல் உன்னில் அந்த உறுதி உள்ளதா?????????????
Title: Re: உன் காதல்
Post by: RemO on December 13, 2011, 05:32:39 PM
kavithai nalaruku nancy
kaathal na rompa pidikuma ungaluku
inum neraya kaathal kavithai podunga athelam suttu :D gf ta kodukanum
Title: Re: உன் காதல்
Post by: Global Angel on December 13, 2011, 09:58:36 PM
நான்சி கவிதை நன்று ஆரம்பத்தில் ஏதோ உறுதியாத்தான் ஆரம்பிகிறாங்க அப்புறம் அவ்ளோதான் ... காணாம போய்டுறாங்க ..
தொடரட்டும் உங்கள் பதிவு
 
Title: Re: உன் காதல்
Post by: aasaiajiith on December 14, 2011, 01:54:02 AM
           வா வா நான்சி ,
 உன் வரவு நல் வரவாகட்டும்
இறுதியில், உறுதியான ஒரு உண்மையை
உணர்ந்து,உணர்த்திட ஒரு ஜீவனின் வரவு
                  வருக வருக
வரிகளில் ,நிலையை வடித்து வைத்தாலும் ,
மனதையே ஒன்றாய் மடித்து வைத்தாலும்
வரியினை ஒருவழியாய் படித்து முடித்துவிட்டு 
அரைகுறையாய் ஆனாலும், நம் நிலயை விட்டுவிட்டு
 வெறும்,  நம் வரிகளையாவது விமர்சிப்பர்.
நீ சொல் உன்னில் அந்த  உறுதி உள்ளதா ?
     நல்ல கேள்வி !
என் குருதியை வடித்து மையிட்டு
நான் வடித்த என் வரிகளை படித்து முடித்திடாமல்
என் உறுதியை அறிய வேண்டும் என கருதி கேட்டாயா?
இல்லை,படித்தும் முடித்து , மறதியில் கேட்டாயா?
எதுவாயிருந்தாலும் இதோ என் பதில்
நம்பிக்கையை தக்கவைத்துக்கொள்ள
எதையும் இழப்பேன் ,எதையும் தக்கவைத்துக்கொள்ள
நம்பிக்கையை இழக்கமாட்டேன் என
அறுதியிட்டு உறுதியாய் உறுதி கூறுகிறேன் !
Title: Re: உன் காதல்
Post by: ஸ்ருதி on December 14, 2011, 05:36:32 AM
மொழி, மதம், இவைகளை கடந்து வருவது தான் காதல்..
காதலிக்க புரிதல் போதும்...

நான்சி உங்கள் கவிதைகள் நன்றாக உள்ளது
நிறைய கவிதைகள் படைக்க வாழ்த்துகிறேன்  ;) ;)




Title: Re: உன் காதல்
Post by: Nancy on December 19, 2011, 04:43:48 PM
Thanks Remo athalam illa remo love alaganathu so athan love kavithai na romba pidikum naala kavithaiya varum en mindku athan appadi

Thanks Angel naan enum neriya post panuven FTC vidu poka maten k va

Thanks Suruthi and aasaiajith
Title: Re: உன் காதல்
Post by: Global Angel on December 20, 2011, 05:45:16 PM
நன்றி நான்சி ....உங்கள் பதிவுகளால் மிளிரட்டும்  ;)