FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on September 30, 2014, 05:25:24 PM
-
வேலிகளை வெட்டி
வெளியே ஏறி
மதங்கொண்ட கட்டிடங்களின் மதில்களை
தகர்த்து ஏறி
பல்லாயிரம் ஆண்டு பழைய
சாதிக் கந்தலாடைகளை
கிழித்தெறிந்து விட்டு
நிர்வணமாக நட
சுதந்திர அருவியில்
சுத்தமாக நீராடு
குப்பைத்தொட்டில் கொட்ட வேண்டியவற்றை
மூளைக்குள் நிரப்பாதே
வெளியில் ஏறி
பின் குவித்து வை
பற்றி எறியப் பற்றவை
சாதி மதம் என்ற
எல்லா குப்பை கூளங்களையும்
கடவுளையும் சேர்த்து