FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: ஸ்ருதி on December 13, 2011, 07:11:38 AM

Title: ஒரு ஆணின் கவர்ச்சி
Post by: ஸ்ருதி on December 13, 2011, 07:11:38 AM
ஒரு ஆணின் கவர்ச்சியாக பெண் நினைப்பது எது என கேட்டால், அந்த கேள்விக்கான பதில் பெண்ணுக்கு பெண் வேறு படும். சராசரியாக பெண்கள் ஆண்களின் கவர்ச்சியாக எதை நினைக்கிறார்கள், அவர்களை கவர்வது எது, அவர்கள் எதிர்பார்ப்புகள் என்ன என ஆராய்ந்து, எனக்கு தெரிந்த பல பெண்களின் கருத்துகளிலிருந்து, ஒரு ஆணின் கவர்ச்சி என்ன...

ஒரு பெண்ணின் கவர்ச்சி என்ன என்பதற்கு பல ஆண்களின் பதில் ஒரே வரியில், ஒரே மாதிரியான பதிலாகயிருந்தாலும், ' ஆண்களின் கவர்ச்சி' என்ன என்பதை ஒரே வரியில் பதிலளிக்க இயலாது, ஏனென்றால் ஆண்களின் கவர்ச்சியில் பல வகைகள் உள்ளன.

நிறம்:

ஒரு ஆண் சிவந்த மேனியாக இருக்க வேண்டும் என ' fair complexion' உள்ள பெண்கள் கூட எதிர் பார்ப்பதில்லை. ஒரு ஆணின் வசீகரம் அவனின் நிறத்தில் அல்ல என்பதே பெண்களின் கருத்து.

முக தோற்றம்:

ஆணின் நிறத்திற்கு முக்கியத்துவம் கொடுக்காத பெண்கள் கூட, அவர்கள் 'மீசை'க்கு முக்கியத்துவம் கொடுக்கிறார்கள். 'மீசை' ஒரு ஆணுக்கு அழகு, கம்பீரம் என்பது அவர்கள் கருத்து. மீசையை பிடிக்கும் பல பெண்களுக்கு ஏனோ ' தாடி' பிடிப்பதில்லை. காரணம் நம்மூர் ஆண்களுக்கு தாடி வளர்த்தால் அதை ஒழுங்காக பராமரிக்கத் தெரிவதில்லை என்பதுதான். சரியாக டிரிம் பண்ணாமல் காடு மாதிரி வளர்ந்த தாடி ஒரு ஆணை சோகமாகவும், நோய்வாய் பட்டது போலவும் தோற்றமளிக்க செய்துவிடும்.

உடை அலங்காரம்:

பொதுவாக பெண்கள் தங்கள் உடை அலங்காரத்திற்கு அதிக அக்கறை எடுத்துக் கொள்வார்கள், அதனால் நல்ல ' ட்ரெஸ் ஸென்ஸ் ஆணிடமும் எதிர்பார்க்கிறார்கள். பேண்டின் நிறத்திற்கு கொஞ்சம் கூட சம்பந்தமே இல்லாத கலரில் ஷர்ட் அணிவது, சரியான அளவில் ஷர்ட் போடாமல் , தொழ தொழ என நீளமான ஷர்ட் அணிவது , போன்றவை பெண்களுக்கு பிடிப்பதில்லை. இன்றைய ஆண்களின் கவர்ச்சி உடையாக அதிக பெண்கள் கருதுவது ஜீன்ஸ் - டி ஷர்ட். இடத்திற்கு தகுந்தார் போல் உடை அணிய வேண்டும். சுத்தமான , நல்ல கலர் சென்ஸுடன் உடை அணிந்தால் பெண்களின் மனதில் சீக்கிரமாக இடம் பிடித்து விடலாம்.

பேச்சு திறன்:

முதன் முறையாக ஒரு பெண்ணிடம் பேசும்போது, லொட லொட வென சொந்த கதை, சோக கதை எல்லாம் பேசக்கூடாது. அதே சமயம் அந்த பெண்ணிடமும் அவளை பற்றின சொந்த விஷயங்களை நோண்டி நோண்டி கேட்க கூடாது. அவளுக்கும் பேச சந்தர்ப்பம் கொடுத்து, அவள் பேசும் போது கூர்ந்து கவனிக்க வேண்டும்.(அவள் முகத்தை மட்டும்!). முதல் நாளிலேயே பெரும்பான்மையான பெண்கள் நன்றாக பேசி பழகமாட்டாகள், அதனால் அவர்கள் பேசும் ஒரிரு வரிகளிலிருந்தே உங்கள் உரையாடலை வளர்த்துக் கொள்வது உங்கள் சாமர்த்தியம்.

இவை அனைத்தும் பல பெண்களின் சில சில எதிர்பார்ப்புகளே, ஏற்கனவே சொன்ன மாதிரி எதிர்பார்ப்புகளும் , ஆசைகளும் பெண்ணுக்கு பெண் வேறுபடும்.  :P ;) ;) ;) ;)
Title: Re: ஒரு ஆணின் கவர்ச்சி
Post by: RemO on December 13, 2011, 09:28:10 AM
Thanks shur :D

Remo nee pass da
Title: Re: ஒரு ஆணின் கவர்ச்சி
Post by: KungfuMaster on December 13, 2011, 02:32:42 PM
shruthi ithula enkita ethana thaguthi irukkumnu unnala sola mudiyuma  8) 8) 8) 8) 8)
Title: Re: ஒரு ஆணின் கவர்ச்சி
Post by: Global Angel on December 13, 2011, 09:49:57 PM
ஹஹா ஆமா சுருதி இதுல சிலது நானும் எதிர் பார்பதுதான் ... மீசை எல்லாம் முறுக்குற அளவு வேண்டாம்.. ஒரு நாலு நாள் மளிக்காதபோல இருந்தா  ஓகே ... அப்புறம் ஒயரமா இருக்கனும்... ரொம்ப ஒல்லியா இருக்க கூடாது ... கொஞ்சமா சுருள் முடி மூக்கு கொஞ்சம் நீளமா ...கைவிரல் நீளமா...அப்பறம் சேட் இன் பண்ணி போடணும் ... அதிகம் சிரிக்க கூடாது மென்மையான சிரிப்பு ...கோபம் இருக்கனும் ...அயோ சொல்லிட்டே போவேன் ....

யாராச்சும் இருந்தா காட்டுங்கயா ... ;)
Title: Re: ஒரு ஆணின் கவர்ச்சி
Post by: ஸ்ருதி on December 13, 2011, 09:54:01 PM
adapaavingala :D


Emo nee paas??? :D:D:D

athai naanga sollanum
Title: Re: ஒரு ஆணின் கவர்ச்சி
Post by: ஸ்ருதி on December 13, 2011, 09:56:29 PM

Master

Peigalai pathi inga yaru solitu iruka :D:D:D


Title: Re: ஒரு ஆணின் கவர்ச்சி
Post by: ஸ்ருதி on December 13, 2011, 09:59:36 PM
ஹஹா ஆமா சுருதி இதுல சிலது நானும் எதிர் பார்பதுதான் ... மீசை எல்லாம் முறுக்குற அளவு வேண்டாம்.. ஒரு நாலு நாள் மளிக்காதபோல இருந்தா  ஓகே ... அப்புறம் ஒயரமா இருக்கனும்... ரொம்ப ஒல்லியா இருக்க கூடாது ... கொஞ்சமா சுருள் முடி மூக்கு கொஞ்சம் நீளமா ...கைவிரல் நீளமா...அப்பறம் சேட் இன் பண்ணி போடணும் ... அதிகம் சிரிக்க கூடாது மென்மையான சிரிப்பு ...கோபம் இருக்கனும் ...அயோ சொல்லிட்டே போவேன் ....

யாராச்சும் இருந்தா காட்டுங்கயா ... ;)


மணி ரத்தினம் படத்துக்கு நடிக்க வைக்க போறியா??

அடியே இருக்க லிஸ்ட்ல ஏதும் சரி வரலையா... ம்ம் உனக்கு தான் கனவுல முகம் பார்க்க முடியல இல்ல

so sad :| :D
Title: Re: ஒரு ஆணின் கவர்ச்சி
Post by: RemO on December 13, 2011, 10:30:30 PM
angel pasangalukkum intha mari niraiya aasaikal iruku :D
Title: Re: ஒரு ஆணின் கவர்ச்சி
Post by: Global Angel on December 13, 2011, 10:50:02 PM
ஹன்சிகா போல நாம அழகா இருந்தா ... மணிரத்னம் ஹீரோ போல ஓராளு வேனும்ன தப்பாடி ...?

ரேம்போ உங்க ஆசையெல்லாம் யாருயா கேட்டாங்க .. ;D
Title: Re: ஒரு ஆணின் கவர்ச்சி
Post by: Sree on December 13, 2011, 10:53:31 PM
brb
Title: Re: ஒரு ஆணின் கவர்ச்சி
Post by: KungfuMaster on December 14, 2011, 02:15:47 AM
oh aama shruthi inga una pathithana solirukanga correct than...