FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Little Heart on September 25, 2014, 01:23:54 PM
-
காற்று மண்டலத்தில் பிராணவாயு (Oxygen) பெரும்பான்மையான பகுதியை நிரப்பாவிட்டாலும், உலகில் உயிரினங்கள் தொடர்ந்து உயிர் வாழவும், பூமி சரியான முறையில் இயங்கவும் இது அத்தியாவசியத் தேவையாக அமைகின்றது. சரி, ஒரு கேள்வி கேட்கிறேன், பதில் கூறுங்கள் பார்ப்போம்! இப்படியான பிராணவாயு, வெறும் 5 வினாடிகள் மட்டும் நமது பூமியில் இல்லாமல் போனால் என்ன எல்லாம் நடக்கும் என்று உங்களுக்குத் தெரியுமா? அதை இன்றைய அறிவு டோஸில் அறிந்து கொள்ளுங்கள்!
1) உயிரினங்கள் அதிகளவிலான சூரிய கதிர்களின் தாக்கத்திற்கு ஆளாகின்றன. இது வெறும் 5 வினாடிகள் என்றாலும் கூட, இதனால் பல நோய்களை, அதிலும் குறிப்பாக தோல் புற்று நோயை ஏற்பட வாய்ப்புகள் அதிகளவில் உள்ளது.
2) வானின் நீல நிறம் மங்கி, கருமை நிறத்தில் காட்சியளிக்கும்.
3) வானை நோக்கி, ஓடு பாதையிலிருந்து புறப்படும் விமானங்கள் அனைத்தும் கீழே விழுந்து நொருங்கி விடும்.
4) உடலின் அழுத்தம் அதிகரிக்கும், இதன் விளைவாக நம் அகச்செவி வெடித்து விடும்.
5) கான்கிரிட் (concrete) கொண்டு கட்டப்பட்ட கட்டுமானங்கள் தூசியாக மாறி விடும்.
6) உயிரணுக்களில் ஹைட்ரஜனின் (Hydrogen) அளவு அதிகரித்து பின்பு அந்த உயிரணுக்கள் ஒரு கட்டத்தில் வெடித்து சிதறும்.
7) கடல் நீர் வற்றி, பூமி வறண்டு விடும்.
8) பூமிக்கு அதன் மேற்பரப்பில் எதையும் தாங்கும் சக்தி இழந்துவிடும்.
பார்த்தீர்களா நண்பர்களே, பிராணவாயு 5 வினாடிகள் இல்லாமல் இருந்தாலே இவ்வளவு விளைவுகள் ஏற்படுகின்றதே, எனவே இந்த வாயு நமது புவியில் உயிர் வாழ்வதற்கு எவ்வளவு அத்தியாவசியமானது என்பது உங்களுக்கு இப்போ நன்றாகவே புரிந்து இருக்கும்.