FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on September 24, 2014, 08:29:05 PM
-
வாழைத்தண்டு ஜாமூன்!
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fcdnw.vikatan.com%2Faval%2F2014%2F10%2Fmgqwyz%2Fimages%2Fp68a.jpg&hash=8631e235164f08f54fd8a14309e0a70609cbb6c2)
தேவையானவை:
ரவுண்டாக நறுக்கிய வாழைத்தண்டு துண்டுகள் - 10, பொடித்த வெல்லம் - அரை கப், எலுமிச்சைச் சாறு - ஒரு டீஸ்பூன், பாதாம், பிஸ்தா, முந்திரி (பொடியாக்கியது) - கால் கப்.
செய்முறை:
ரவுண்டாக நறுக்கிய வாழைத்தண்டை தண்ணீரில் போட்டு வைக்கவும். ஒரு பாத்திரத்தில் வெல்லத்தை சேர்த்து, தண்ணீர் ஊற்றி, கரைந்ததும் வடிகட்டி எடுத்து அடுப்பில் வைத்து பாகு காய்ச்சவும். பாகு ஒரு கம்பி பதம் வந்ததும் அதில் வாழைத்தண்டைப் போட்டு எலுமிச்சைச் சாறு சேர்த்து 10 நிமிடம் கொதிக்கவிடவும்.
பிறகு, அடுப்பிலிருந்து இறக்கி ஒரு தட்டில் வாழைத்தண்டைப் பரப்பி, அதன் மீது பொடித்த பாதாம், பிஸ்தா, முந்திரி தூவி பரிமாறவும்.
வாழைத்தண்டை விரும்பாதவர்களும் இதை ருசித்துச் சாப்பிடுவார்கள்.