FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: SioNa on September 24, 2014, 07:58:49 AM

Title: மிளகு சிக்கன் டிக்கா
Post by: SioNa on September 24, 2014, 07:58:49 AM
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Ftamil.boldsky.com%2Fimg%2F2012%2F03%2F20-non-veg-1-300.jpg&hash=cfbcd37765bc31d87533ba938bd5192aed64232d)

தேவையான பொருட்கள்
எலும்பில்லாத சிக்கன் - அரை கிலோ
மிளகு தூள் – 5 டீ ஸ்பூன் உப்பு - தேவையான அளவு
இஞ்சி பூண்டு விழுது - 4 டீ ஸ்பூன்
பச்சை மிளகாய் விழுது – 4 டீ ஸ்பூன்
எண்ணெய் – 100 மிலி
தயிர் – 200 மிலி
உப்பு - கால் டீ ஸ்பூன்
எலுமிச்சை சாறு – சிறிதளவு

செய்முறை
சிக்கனை மஞ்சள் தூள் போட்டு நன்றாக கழுவவும். அதில் இஞ்சி பூண்டு விழுது, சிறிது உப்பு போட்டு முப்பது நிமிடம் ஊற வைக்கவும். பின்னர் தயிரில் சிறிதளவு உப்பு, அரைத்த பச்சை மிளகாய், பொடித்த மிளகு போட்டு கலக்கி ஏற்கனவே ஊற வைத்த சிக்கனில் போட்டு எல்லாவற்றையும் கலந்து மறுபடியும் முப்பது நிமிடம் ஊற வைக்கவும். அடுப்பில் தோசைக்கல்லை வைத்து லேசாக எண்ணெய் ஊற்றி அதில் ஊறவைத்த சிக்கனை மட்டும் தனியாக எடுத்து வேகவைக்கவும். மூடி போட்டு மிதமான தீயில் எரிய விடவும். 5 நிமிடம் வெந்த உடன் சிக்கனை திருப்பி விடவேண்டும். பின்னர் சிக்கன் நன்றாக வேகும் வரை திருப்பி விட வேண்டும். லேசாக எண்ணெய் விட்டாலே போதும் அதிக எண்ணெய் தேவையில்லை. சிக்கன் நன்றாக வெந்த உடன் தட்டில் எடுத்து எலுமிச்சை சாறு விடவும். வாசனை சூப்பராக இருக்கும். சுவையான சிக்கன் டிக்கா ரெடி. இதை மைக்ரோவேவ் ஓவனிலும் செய்யலாம். வாணலியிலும் டீப் ப்ரை செய்யலாம்.