FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Little Heart on September 22, 2014, 05:53:38 PM

Title: இதயம் பற்றிய சில சுவாரசியங்கள்
Post by: Little Heart on September 22, 2014, 05:53:38 PM
நமது இதயம், உடலிலுள்ள அனைத்து இரத்தக் குழாய்களுக்கும் இரத்தத்தைச் சுழற்சி செய்யும் ஒரு மிக முக்கியமான உறுப்பு ஆகும். மேலும் இது முதல்நிலை இரத்த ஓட்ட அமைப்புப் பகுதியாக உள்ளது. இன்றைய அறிவு டோஸில், நமது இதயம் எவ்வாறான வியக்கத்தக்க பல செயல்களை செய்கிறது என்பதை அறிந்துகொள்ளுங்கள், நண்பர்களே!

ஒன்று தெரியுமா…? இதயம் துடிப்பதற்கு மூளை தேவையில்லை; ஏன், உடலும் கூட தேவையில்லை. இதயத்திற்க்குச் சொந்தமாகவே மின்சார அமைப்பு உள்ளது. இதனால், மூளை இறந்து போன பின்பும் கூட சில நிமிடங்களுக்கு இதயம் துடித்துக் கொண்டே இருக்கும்! மேலும், உடலிலிருந்து நீக்கிய பின்பும், ஒரு குறுகிய நேரத்திற்குத் துடித்துக் கொண்டிருக்கும். அதுவும் குறிப்பாக பிராணவாயு (oxygen) இருக்கும் வரை இதயத்தால் துடிக்க முடியும்! இது அற்புதம் அல்லவா?

நமது இதயம் மிகவும் சுறுசுறுப்பான ஓர் உறுப்பு ஆகும், ஏனென்றால் அது ஒரு நாளைக்கு மட்டுமே 100,000 தடவை துடிக்கின்றது. சராசரி வாழ்நாள் முழுவதும், சுமார் 2.5 பில்லியன் முறை துடிக்கிறது. உங்கள் இதயம் சுழற்சி செய்யும் இரத்தம், இரத்த நாளங்கள் வழியாக சுமார் 100,000 கிலோமீட்டர் பயணம் செய்கிறது.

இரத்த அழுத்தம் இரண்டு அளவீடு ஆகும்: சிஸ்டாலிக் அழுத்தம் என்பது இதயம் துடிக்கின்ற போது ஏற்படும் அழுத்தம், மற்றும் இதயவிரிவமுக்கம் என்பது இதய துடிப்புகளுக்கு இடையே ஏற்படும் அழுத்தம். இந்த இரண்டு அழுத்தங்களை வைத்தே முறையாக இரத்த அழுத்தத்தை அளவிட முடியும், என்கின்றனர் மருத்துவர்கள். மேலும், சில ஆய்வுகள் இரண்டு கைகளிலும், இரத்த அழுத்த அளவீடு எடுத்தால் மட்டுமே, சரியான முறையில் இதய நோய் ஆபத்தைத் தீர்மானிக்க முடியும் என்று கூறுகின்றன.

இதய நோய்கள், துணையை இழந்த வயதானவர்களை இரண்டு மடங்கு அதிகமாக தாக்கும் ஆபத்து உள்ளதாக சமீபத்தில் வந்த ஒரு ஆய்வு தெரிவிக்கிறது. மேலும், ஆண்களை விட பெண்களே அதிகமாக இதய நோய்களால் மரணிப்பதாக மற்றொரு ஆய்வு தெரிவிக்கிறது.