FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Little Heart on September 22, 2014, 05:50:37 PM
-
ஒன்று தெரியுமா நண்பர்களே? நாம் அனைவரும் இந்த உலகில் பிறக்கும் பொழுதே நமக்கு சொந்தமாகக் கொஞ்சம் தங்கத்தையும் எடுத்துக் கொண்டே வருகிறோம்! நமது உடலில் 0,0002 கிராம் தங்கத் துகள்கள் உள்ளது. இதில் பெரும்பான்மையானது நமது இரத்தத்தில் கலந்து உள்ளது. எனவே, நீங்கள் ஒரு 8g தங்கக் கட்டி செய்யப் போதுமான இரத்ததைச் சேகரிக்க, சுமார் 40,000 மக்களின் இரத்தத்தை முழுதுமாக உறிஞ்சு எடுத்தால் தான் முடியும். ஆனால், தயவு செய்து அப்படி ஒன்றும் செய்துவிடாதீர்கள் நண்பர்களே :D!
மனித உடலில் மட்டும் இல்லை, வேறு எதிர்பாராத இடங்களிலும் நீங்கள் தங்கத்தைக் கண்டுபிடிக்கலாம். டக்ளஸ் ஃபிர் (Douglas Fir) மற்றும் ஹனிசக்குள் (Honeysorryle) போன்ற சில தாவரங்கள் மண்ணிலிருந்து மிகவும் திறமையாகத் தங்கத்தை உறிஞ்சு எடுக்கிறது. ஆனால், இந்தத் தாவரங்களில் இருந்து தங்கத்தைப் பிரித்தெடுப்பது என்றால் அது லாபமாக முடியாது. தங்கத்தைப் பிரித்து எடுப்பதற்குத் தேவைப்படும் பணமோ இதில் இருக்கும் தங்கத்தை விட அதிகமானது!
உலகிலேயே மிக அதிகமாகத் தங்கத்தைக் கொண்ட சுரங்கம் கடல்கள் தான். இங்கே, 10 கோடி டன் தங்கத் துகள்கள் அங்கும் இங்கும் என்று மிதந்து கொண்டே இருக்கின்றது.