FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Little Heart on September 22, 2014, 05:42:50 PM
-
உண்மை சொல்லப்போனால் நமது கண்களும் ஒரு விதமான நிழற்படக் கருவி தானே, நண்பர்களே? அப்படி என்றால் நமது இந்த நிழற்படக் கருவிக்கு எவ்வளவு மெகாபிக்சல் இருக்கும் என்று எப்போதாவது சிந்தித்துப் பார்த்திருக்கின்றீர்களா? இன்றைய அறிவு டோஸில் அதற்குப் பதிலைக் கூறுகின்றேன்.
சராசரி மனிதனின் விழித்திரையில் ஐந்து மில்லியன் கூம்பு வாங்கிகள் (cone receptors) உள்ளன. நாம் காணும் படங்களின் நிறங்களைப் பார்க்க இந்தக் கூம்புகள் காரணமாக இருப்பதால், நம் கண்களை ஐந்து மெகாபிக்சல் (megapixel) நிழற்படக் கருவிக்கு ஒப்பாகக் கூறலாம். ஆனால், நாம் பார்க்கும் படத்தைக் கண்டறியவும், அதன் வண்ணங்களைப் பிரித்துணரவும் மேலும் 100 மில்லியன் கோள்களும் (rods) நம் கண்களில் உள்ளன. இருந்தாலும், இந்த 105 மெகாபிக்சலும் குறைவான மதிப்பீடாகவே இருக்கும்; காரணம், நம் கண்கள் ஒன்றும் அசைவில்லாத நிழற்படக் கருவி அல்ல. நமக்கு மொத்தம் இரண்டு கண்கள் உண்டு, எனவே இந்த இரு விழிகளும் தொடர்ந்து அங்கும் இங்கும் சுழன்று காட்சிகளைக் கண்டு, அவற்றை மூளையில் விரிவான படமாகப் பதிவு செய்கின்றது. எனவே, விஞ்ஞானிகள் முடிவாக நமது கண்கள் 576 மெகாபிக்சல் நிழற்படக் கருவிக்கு ஒப்பானது எனக் கூறுகின்றனர்.