FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: aasaiajiith on December 12, 2011, 12:49:42 AM
-
அறிமுகம் ஆன நாள் முதலாய்
இதோ இன்றுவரை
குரலையும் , வரிகளையும்
தவிர வேறு அறிமுகம்
எதையும் தராமல் மறைமுகமாய் ,
அரைகுறை ஆசை
குறை இல்லாமல் நிறம்பி, நிறையாய்
நிறைந்து கரையை தேடி
தள்ளாடும் ஆசை கப்பலுக்கு
கரைகாட்டும் துறைமுகமே !
உனக்காக காத்திருக்கும் தருணங்களில்
ஒரு ரகசியம் அறிந்தேன்
உன் மௌனம் கூட
இத்துனை அழகு என்று ...
உன் ஒவ்வொரு வரிகளையும்
நகல் எடுத்துவைத்து படித்தேன் ,
வரி வழியே வழிந்தோடிய
உயர்வலியை, உயிர்வலியை
அறிந்து, புரிந்து துடித்தேன்
இத்துனை சிறிய வயதில்
சிறிய மனதில்
இத்தனை வலிகளின் வரிகளா ?
என கொடியவனின் கொடூரம்
கண்டு கொதித்தேன் .
உன் வரிகளில் வடிந்த வலியின் வாட்டத்தை,
வருத்தத்தின் ஓட்டத்தை போக்கிடவே
என் வரிகளின் வாயிலாக விழந்தேனே ஒழிய
உன் நெஞ்சத்தை கொள்ளை கொள்ளவோ
கொஞ்சும் கவி பாடும் உன்னை
மஞ்சத்தில் கிடத்தி பஞ்சமில்லா
உன் அழகை கொஞ்சம் கொஞ்சமாய்
ரசிக்கவோ ருசிக்கவோ, நஞ்சு எண்ணம்
கொஞ்சும் கூட இல்லை என் பிஞ்சு நெஞ்சினில்
நான் கவிதை எழுதி கவிஞன் ஆகவே
கவிதை ஆனவள் நீ என ஐயம் !
அதனால்தான் கவிதாயினி உன்னை
கவி தாய் நீ என்று அழுத்தம் திருத்தமாய்
அழுத்தி சொன்னேன் அடிகோடிட்டு.
மாற்றார் தூற்றுவார் என்பதற்க்காக
ஊட்டமே இல்லாத ஒரு காரணம் சொல்லி
என் மனதில் சொட்டு சொட்டாய்
அமிலம் விட்டுவிட்டாய் ,அதைவிட
உன் வரிகள் தூற்றும்படியாய் இல்லையென்றாலும்
உன் அனுகுமுறை,எண்ணம் போற்றும்படியாய் இல்லை
என்று தூற்றி அதே அமிலத்தை அல்லி ஊற்றியிருக்கலாம் .
இருந்தும் உன்னை போற்றிகொண்டேதான் இருப்பேன்
என் மனதில் உன் நினைவுசெடி நீளமாய் நெடுநேடுவாய்
வளர என் கவிதை நீரை ஊற்றிக்கொண்டே தானிருப்பேன் .
வரி கண்டபின்னும் வெறி கொண்டு
நீ என்னை வெறுத்தாலும்
வெறுப்பின் வார்த்தையால் என் மனதை
வறுகடலையாய் வறுத்தாலும்
மறைப்பதற்காகவே மனதின் மனத்திரையை
திறக்க மறுத்தாலும் ...
மனம் சிறிதளவும் சிறுத்துபோகாமல்
ஒரு பொழுதும் உன்னை வெறுக்காமல்,
வார்த்தைகளால் வறுக்காமல் ,மனதை மறுக்காமல்
எல்லாவற்றையும் பொறுத்திருப்பேன் ...
இப்படிக்கு
அன்றும் , இன்றும், என்றும் உன் நினைவோடு
ஆசை(அஜித்)
-
naala kavithai ajith
kavihtai moolama unga valiyai solringa
kelungal tharapadum
thattungal thirakka padum nu soluvanga
neenga thatitey irunga kandipa oru naal mana kathavu thirakkum
-
கிட்டாதாயின் வெட்டென மாற ..
மனவலிகள் மாயமாகும்
மனதோடு ஒரு முல்லை
மனமார உறவாடினால் ...
கவிதை நன்று
அதில் உன் உயிர்வலி கண்டு
ஒரு மனம் இங்கு
உனக்காக கவிதை சொல்கின்றேன்
மனம் நாடும் வேறு பொழுதில்
உன் மனதை செலுத்திவிடு
மனமும் அமைதியாகும்
வேறு மார்க்கமும் தோன்றும் .
-
Remo paathu thatta sollu
romba thatti odukku vilunthura poguthu
-
கிட்டாதாயின் வெட்டென மற
சரி, நியாயம்தான் , கிட்டாதென்பதை
திட்டவட்டமாய் நீ கட்டம் கட்டி சொல்வது எப்படி ?
மற என்கிறாய் , மனதை திற என்று தவம் இருப்பவனை
மற என்பது எவ்வகை முறை ?
நீ மற என்பதில் உடன்பாடில்லாமல் தான்
மற என்பது மாறி மாற ஆகிருக்கிறதோ?
மற என்பதும் மறப்பதற்கு இது ஒன்றும்
ரயில் சிநேகம் இல்லை,மெயில் சிநேகம்
காகித உணர்வு இல்லை காவிய உணர்வு
"மாற்றம் ஒன்றே மாற்றம் இல்லாதது "
உனக்கு இது புதிதில்லை
ஏற்றத்தில் இருக்கும் மனம் கொஞ்சம் மாற்றம் கண்டு
இறக்கம் கண்டு இரக்கம் காட்டாதா?
-
வெறும் விழலுக்கு நீர் இறைகிறாய் என்றுதான்
என் மனம் வருந்தி உடன் உரைத்தேன்
உன் வாழ்க்கை உன் நேசம்
நினைப்பதும் மறப்பதும் உன் விருப்பம்
-
ஜெர்மனியின் செந்தேன்மலரே (ரோசா) !
முதலில், நான் விழலுக்கு
நீர் இறைப்பதாய் சொல்வது அடிப்படை பிழை
வருத்தம் இல்லாமல் திருத்திக்கொள் !
அப்படியே நீ பிடித்த முயலுக்கு
மூன்று கால்கள் தான் என்று முரண்டு பிடித்தால்
இருக்கட்டுமே ! இருக்கட்டுமே !
விளைநிலத்திற்கே நீர் இறைப்பார் பலர் இருக்க
விழலுக்கும் நீர் பாய்தேன் என்ற திருப்தி போதுமே !