FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Little Heart on September 22, 2014, 11:31:04 AM
-
உடல் எடையைக் குறைக்க பெரும்பாலானோர் வித்தியாசமான பலவகை மருந்துகளையும், உடற்பயிற்சிகளையும் மேற்கொள்வதை பார்த்திருக்கிறோம். ஆனால் சூயிங்கம் சாப்பிடுவதால் உடல் எடையைக் குறைக்க முடியும் என்றால் உங்களால் நம்ப முடியுமா…? ஆம்! அது உண்மை தான். சூயிங்கம் சாப்பிடும் போது உடலின் வளர்ச்சிதை மாற்ற விகிதம் அதிகரிப்பதால், உடல் எடையைக் குறைக்க உணவுக் கட்டுப்பாட்டுடன் இருக்கும் போது இது மிகவும் உதவியாக இருக்கும் என சில ஆராய்ச்சி முடிவுகள் கூறுகின்றன.
ஆராய்ச்சியில் இருந்து கூறப்படுவது என்னவென்றால், இனிப்புப் பொருளற்ற சூயிங்கம்மை நிமிடத்திற்கு 100 முறை மெல்லும் பொழுது உடலின் வளர்ச்சிதை மாற்ற விகிதம் அதிகரிக்கிறது. இந்த வளர்ச்சிதை மாற்ற விகித அதிகரிப்பின் மூலம் மணிக்கு 70 கலோரிக்கள் உடலிலிருந்து நீக்கப்படுகிறது. ஆனால் நிமிடத்திற்கு 100 முறை மெல்லுவது என்பது மிகவும் கஷ்டமான செயல் ஆகும். அதற்குக் காரணம், ஒருவரோடு பேசும் போதோ அல்லது மற்ற வேலைகளைச் செய்யும் போதோ சூயிங்கம் மெல்லுவதில் கவனம் செலுத்த முடியாது.
சரி, நாம் சூயிங்கத்தினை மெல்லும் போது நமது உடலில் என்ன நடைபெறுகின்றது என்பதைப் பார்ப்போமா? பொதுவாக சூயிங்கத்தை மெல்லும் போது காற்றையும் சேர்த்து உட்கொள்கிறோம், இந்தக் காற்று நமது உறுப்புகளுக்கு, வயிற்றிற்கு உணவு வருகிறது என்ற எண்ணத்தை ஏற்படுத்தும். இதனால் உறுப்புகள் ஓய்வெடுக்காது, தொடர்ச்சியாக இயங்கும். சூயிங்கத்தின் மற்றொரு பயன் என்னவென்றால் பற்களுக்கு செல்லும் இனிப்பினைத் தடுக்கும். மேலும் சாப்பிட்டு முடிந்தவுடன் சூயிங்கம் எடுத்துக்கொள்வது, அதிக கலோரிகள் கொண்ட இனிப்பு வகைகளை உட்கொள்வதை விட நல்லது என்று கூறுகின்றனர்.
என்ன நண்பர்களே, நாம் சாதாரணமாக உட்கொள்ளும் சூயிங்கம்மில் இத்தனை விஷயங்கள் உள்ளதா என வியப்பாக இருக்கிறதா…?