FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Little Heart on September 22, 2014, 11:29:40 AM
-
சாதாரணமாகவே அனைத்துக் கடைகளிலும் கிடைக்கும் வாழைப்பழத்தால் ஏகப்பட்ட நன்மைகள் உள்ளன. அதில் இந்தப் புதிய நன்மையினையும் சேர்த்துக்கொள்ளுங்கள், நண்பர்களே! நன்கு கனிந்த பழுப்புப் புள்ளிகளைக் கொண்ட மஞ்சள் நிற வாழைப்பழம் புற்றுநோயை எதிர்க்க வல்லது என ஜப்பானியர்கள் ஆராய்ச்சியின் மூலம் கண்டறிந்துள்ளனர். எத்தனை அதிகமான புள்ளிகள் இருக்கிறதோ, அத்தனை அதிகமான சத்துக்கள் கொண்டதாகப் பழம் இருக்கும் என்கின்றனர் அவர்கள். இது பச்சை நிறத்திலுள்ள வாழைப்பழத்தினைக் காட்டிலும், எட்டு மடங்கு இரத்த வெள்ளையணுக்களுக்கு சக்தி தருகின்றது.
ஆச்சரியமூட்டுவதாக இருந்தாலும், இது உண்மை தான். சாதாரணமாகவே நன்கு பழுத்த பழங்களில் சத்துக்கள் அதிகம், அதிலும் இந்த வகையான பழங்களில் ஸ்டார்ச் அதிகம் இருப்பதால் உடனடியாக இரத்தத்தில் குளூக்கோஸை அதிகப்படுத்தும், அத்துடன் எளிதில் செரித்தும் விடும். ஆனால், இது நீரிழிவு நோய் உள்ளவர்களுக்குப் பயன்படாது.
இந்தப் பழுப்பு நிற புள்ளிகள் அதிகமான வாழைப்பழத்தினை உண்ணும் போது, புற்றுநோய்க்கு எதிராகப் போரிடும் அணுக்களின் எண்ணிக்கை அதிகரிப்பதாகத் தெரியவந்துள்ளது. அத்துடன் ஒரு சாதாரண நடுத்தர அளவுள்ள பழத்தில் 150 கலோரிகள் ஆற்றல் இருக்கின்றது. அதனால் தினமும் ஒன்று அல்லது இரண்டு வாழைப்பழங்கள் சாப்பிடுவது உடல் சக்திக்கு உதவும் என்கிறார்கள் ஆராய்ச்சியாளர்கள்.
இப்படிச் சாதாரணமாகக் கிடைக்கும் பழத்தில் இவ்வளவு சத்துக்கள் இருக்கும்போது, எதற்கு மருத்துவமனைக்குப் போக வேண்டும் நண்பர்களே? நீங்கள் ஒரு வாரத்தில் எத்தனை வாழைப்பழங்கள் சாப்பிடுவீர்கள்?