FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Little Heart on September 22, 2014, 11:28:57 AM
-
நாம் தண்ணீரில் (குறிப்பாக குழந்தைகள்) அதிக நேரம் விளையாடும் போது அவர்களின் தோல் சுருக்கங்களுடன் காணப்படும். அதற்குக் காரணம் நமது தோலும் தண்ணீரை உறிஞ்சுகிறது என்று நினைத்திருப்போம், ஆனால் அது தவறு, நண்பர்களே! நமது அடுத்த செயலுக்கான முன்னேற்பாடாகச் செயல்படுவதால் இவ்வாறு சுருக்கங்கள் ஏற்படுகிறது. அதாவது ஈரமான சூழலில் நம்மால் முடிந்தவரை தாக்குப்பிடிக்க இந்த சுருக்கங்கள் உண்டாக்கப்படுகின்றன. அதனால் தான் முடிந்தவரை கைகள், கால்கள் என உடலின் அனைத்து ஈரமான பகுதிகளையும் சுருக்கங்கள் ஏற்படுத்தப்படுகிறது.
நரம்புகளில் பிரச்சினையுள்ள ஒரு சில நோயாளிகளுக்கு இத்தகைய சுருக்கங்கள் நீண்ட நேரம் நீரில் நின்றாலும் ஏற்படுவதில்லை என ஆய்வாளர்கள் கண்டறிந்துள்ளனர். நீண்ட நேரம் தண்ணீரில் நிற்கும்பொழுது தோன்றும் சுருக்கங்கள் முதலில் நீரின் மூலமே ஆரம்பித்து வைக்கப்படுகின்றன. பின்பு தோலுக்கு அடியில் உள்ள இரத்த நாளங்கள் மற்றும் நரம்புகளின் இணைப்பு வரை முன்னேறிச் சென்று தோலுக்கு அடியில் உள்ள நீரின் அளவினைக் குறைக்கிறது. இத்தகைய உடல் செயல்பாடுகள் தான், சுருக்கங்கள் மேலும் பரவுவதற்குக் காரணமாக அமைகின்றன.