FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Little Heart on September 20, 2014, 01:11:53 PM
-
காது கேளாதவர்கள் கோக்ளியர் கருவியின் (COCHLEAR IMPLANTS) மூலம் மீண்டும் கேட்கும் திறனைப் பெறும் வழியைப் பல வருடங்களுக்கு முன்னரே அறிவியலாளர்கள் கண்டுப்பிடித்து விட்டனர். இருந்தாலும், இவ்வழியின் மூலம் வழக்கம் போல் ஒருவரால் அனைத்தையும் கேட்கும் ஆற்றலைப் பெற முடியாது. உதாரணத்திற்கு, மாறுபட்ட சுருதிகளையோ அல்லது இசையையோ இவர்களால் தரம் பிரிக்க இயலாது. இந்தக் குறையை எதிர்கொள்ளும் வகையில் சமீபத்தில் கோக்ளியர் கருவியோடு புது மரபணுவைக் காதிற்குள் புகுத்தும் அதிநவீன முறையைக் கண்டுபிடித்துள்ளனர். Cochlea எனப்படும் பகுதியிலுள்ள சிறிய முடிகளின் உதிர்வாலேயே ஒருத்தர் செவிடராகிறார். இதன் விளைவாக cochlea ஒலியை மூளைக்கு சமிக்ஞையாக மாற்றும் தன்மையை இழக்கின்றது. எனவே, இப்புதிய முறையில் மறுபடியும் கோக்ளீயாவில் சிறு முடிகள் வளரத் தொடங்கிறது. இதன் ஊடாக, இயல்பான மனிதரைப் போல் கேட்கும் சக்தியை ஒரு செவிடரால் பெற முடியும். இம்மரபணு வெறும் 6 வாரங்கள் மட்டுமே நிலைக்கும் என்பதால் அவ்வப்போது இதனைப் புதுப்பித்தால் காது கேளாமை பிரச்சனையை அடியோடு தவிர்த்து ஒரு செவிடரால் இயல்பாக அனைத்தையும் கேட்க இயலும் என விஞ்ஞானிகள் கூறியுள்ளனர்