FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Little Heart on September 20, 2014, 01:05:51 PM

Title: டைட்டானிக் மூழ்கும் போது அருகிலே இருந்த கப்பல்
Post by: Little Heart on September 20, 2014, 01:05:51 PM
‘டைட்டானிக்’ 1912 ஆம் ஆண்டில் முழ்கிய ஒரு உல்லாச கப்பல் என்பது அனைவரும் அறிந்த ஓர் விடயம் ஆகும். ஆனால் அது மூழ்கும்போது அதனருகில் மற்றொரு கப்பலும் இருந்தது என்பது உங்களில் எத்தனை பேருக்குத் தெரியும் நண்பர்களே? 1517 பயணிகளைப் பலி வாங்கிய இந்த டைட்டானிக் கப்பல் மூழ்கடிக்கப்பட்ட பிறகே, கப்பல் சம்பந்தப்பட்ட பல பாதுகாப்பு விஷயங்கள் மேற்கொள்ளப்பட்டன. டைட்டானிக் மூழ்கடிக்கப்பட்ட போது, அதனைக் கண்ட கப்பலும் உள்ளது என கலிஃபோர்னியாவினைச் சேர்ந்தவர்கள் குறிப்பிடுகின்றனர்.

டைட்டானிக் தாங்கள் பாதிக்கப்பட்டுள்ளதை ராக்கெட்டுகள் ஊடாகத் தெரிவித்த போது, அதனைக் கலிஃபோர்னிய கப்பல் தளத்தில் இருந்த அலுவலர்கள் கண்டுள்ளனர். அவர்கள் கப்பலின் கேப்டன் லார்டினை விழிப்புணர்வுடன் இருக்க அழைத்த போது அவர் தூங்கியதாக கூறப்படுகிறது. ஒருவேளை அது வேறு ஏதும் நிறுவனம் சார்ந்த குறிகளாகக் கூட இருக்கலாம் என அவர்கள் ஊகித்தனர். எப்படியிருந்தாலும் நிலை சரியில்லை என்பதை அங்கு இருந்த சிலர் உணர்ந்தனர்.

டைட்டானிக் கப்பல் மூழ்கும்போது அறிவிக்கப்பட்ட எட்டு வெள்ளை ராக்கெட்டுகள் அருகிலிருந்த கப்பல்களுக்கு கண்டிப்பாக தெரிந்திருக்க வேண்டும், ஆனால் கேப்டன் லார்ட் ஒன்றும் செய்யாமல் போனது விதியின் விளையாட்டு. அவர்கள் இருந்த கப்பல் சில மைல் தூரங்கள் மட்டுமே இருந்தும் அவர்களைக் காப்பாற்ற முடியாமல் போனது இன்னொரு துயரமான செய்தி.

இது கவலைக்கிடமான விடயம் அல்லவா?