FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on September 16, 2014, 07:50:31 PM

Title: ~ நண்டு மசாலா / Crab Masala ~
Post by: MysteRy on September 16, 2014, 07:50:31 PM
நண்டு மசாலா / Crab Masala

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F3.bp.blogspot.com%2F-17lh7TXWbJc%2FVBfblgFxRVI%2FAAAAAAAAOqQ%2FdvS4W90wX-M%2Fs1600%2Fnandu%252Bmasala.jpg&hash=931eeb3834679a85ae42587140009ec22d0b21d8)

தேவையான பொருட்கள்;-

சுத்தம் செய்து உடைத்த நண்டு மீடியம் சைஸ் - 8
எண்ணெய் - 5 டேபிள்ஸ்பூன்
கருவேப்பிலை ,மல்லி இலை - சிறிது
உப்பு - தேவைக்கு.
இனி வறுத்து அரைக்க தேவையானவை:
சீரகம் - அரைடீஸ்பூன்
மிளகு - 1 டீஸ்பூன்
சோம்பு - அரை டீஸ்பூன்
மல்லி - 2 டீஸ்பூன்
இஞ்சி - சிறிய துண்டு
பூண்டு - 6 பல்
பச்சை மிளகாய் - 4
நறுக்கிய வெங்காயம் - 150 -250 கிராம்
நறுக்கிய தக்காளி - 250 கிராம்
மல்லி இலை - அரை கப்

 முதலில் முழு மல்லி,சீரகம்,மிளகு, சோம்பு சிறிது எண்ணெய் விட்டு வறுத்துக் கொள்ளவும்,அத்துடன் இஞ்சி,பூண்டு, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு வதக்கவும்.வெங்காயம் தக்காளி, மல்லி இலை சேர்த்து மீண்டும் நன்கு வதக்கவும்.சிறிது உப்பு சேர்க்கவும்.ஆறியவுடன் மிக்ஸியில் விழுதாக அரைத்து எடுக்கவும். இதுவே சட்னி போல் சூப்பராக இருந்தது.

செய்முறை:

வாணலியில் எண்ணெய் விடவும். கருவேப்பிலை போட்டு வெடிக்க விடவும்.அரைத்த விழுதை சேர்த்து நன்கு வதக்கவும்.
சுத்தம் செய்து துண்டு செய்த நண்டு சேர்க்கவும்.பிரட்டி விடவும்.தேவைக்கு ஒரு கப் தண்ணீர் சேர்க்கவும்.மூடி போட்டு வேக விடவும்.உப்பு சரிபார்க்கவும்.
நன்றாக வெந்த பின்பு அடுப்பை அணைக்கவும்.அழகுக்கு நறுக்கிய மல்லி கருவேப்பிலை தூவி பரிமாறவும்.
சுவையான நண்டு மசாலா ரெடி.
மசாலா எந்தளவு வேண்டுமோ அதற்கு தகுந்த படி சாமான் சேர்த்து செய்து கொள்ளவும்.
சப்பாத்தி, தோசை,ஆப்பம்,சூடான சாதத்திற்கு நன்றாக இருக்கும்.நண்டு உடைத்து சாப்பிடவே நேரம் சரியாகிடும், அதனால் உடன் ஆப்பமோ, சப்பாத்தியோ ப்ரெட் டோஸ்ட்டோ இரண்டு இருந்தால் போதும்.