FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on September 14, 2014, 01:24:20 PM
-
தோசை வகைகள் 1
தினமும் இட்லி , தோசை என்று போர் அடிக்கிறதா....
வீட்டில் இட்லி மாவு இருந்தால் போதும், தினமும் வகை வகையாக சத்தான தோசை மிக எளிமையான முறையில் செய்யலாம்.
வெள்ளை சோளம், கேழ்வரகு, கம்பு, கோதுமை இவற்றை தலா 1 கிலோ வாங்கி, மாவு மெசினில் கொடுத்து தனித்தனியாக அரைத்து வைத்து கொள்ளவும்.
தேவைப்படும் பொழுது இட்லி மாவில் கலக்கி சுடலாம்.
அணைத்து மாவுகளிலும் தலா ¼ கப் எடுத்து, இட்லி மாவுடன் கலந்தால் சத்துமாவு தோசை ரெடி.
இங்கே நாம் சுவையான தோசைகளை ,எளிமையான செய்முறையை பார்க்கலாமா......
சோள தோசை
தேவையான பொருட்கள்
இட்லி மாவு – ½ லிட்டர்
வெள்ளை சோள மாவு – (200 மி.லி கப்பில்) 1 ½ கப்
உப்பு
சின்ன வெங்காயம் – 10
கறிவேப்பிலை – சிறிது
சீரகம் – ¼ டீ.ஸ்பூன்
செய்முறை
புளித்த இட்லி மாவுடன் , சோள மாவை உப்பு சேர்த்து கரைக்கவும்.
குறிப்பு:
இரவு தோசை செய்ய வேண்டும் என்றால், 2 மணி நேரத்திற்கு முன் கரைத்து வைத்தால் போதும்.
மாவை கரைத்த உடனேயும் செய்யலாம், ஆனால் சிறிது ஊறவைத்து செய்தால் சுவை கூடும்.
கலக்கி வைத்த மாவில் சின்ன வெங்காயம் ,கறிவேப்பிலை, சீரகத்தை மிக்சியில் அரைத்து சேர்க்கவும்.
பின் லேசாகவோ , மெத்தெனவோ தோசை சுட்டு, தக்காளி கடைசல் மற்றும் தேங்காய் சட்னியுடன் பறிமாறவும்.
விருப்பப்பட்டால் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து செய்யலாம்.
இதே மாவை பணியாரமாகவும் செய்யலாம்
-
ராகி ( கேழ்வரகு ) தோசை
தேவையான பொருட்கள்
இட்லி மாவு – ½ லிட்டர்
ராகி மாவு – (200 மி.லி கப்பில்) 1 ½ கப்
உப்பு
செய்முறை
புளித்த இட்லி மாவுடன் , ராகி மாவை உப்பு சேர்த்து கரைக்கவும்.
குறிப்பு:
இரவு தோசை செய்ய வேண்டும் என்றால், 2 மணி நேரத்திற்கு முன் கரைத்து வைத்தால் போதும்.
மாவை கரைத்த உடனேயும் செய்யலாம், ஆனால் சிறிது ஊறவைத்து செய்தால் சுவை கூடும்.
கலக்கி வைத்த மாவில் விருப்பப்பட்டால், சின்ன வெங்காயம், கறிவேப்பிலை, சீரகத்தை மிக்சியில் அரைத்து சேர்க்கவும்.
பின் லேசாகவோ , மெத்தெனவோ தோசை சுட்டு, தக்காளி கடைசல் மற்றும் தேங்காய் சட்னியுடன் பறிமாறவும்.
விருப்பப்பட்டால் பொடியாக நறுக்கிய வெங்காயம் சேர்த்து செய்யலாம்.
இதே மாவை பணியாரமாகவும் செய்யலாம்.
-
கோதுமை தோசை
செய்முறை
கோதுமை மாவுடன் உப்பு, தண்ணீர் சேர்த்து கரைத்து, தோசை சுடவும்.
லேசாகவோ , மெத்தெனவோ தோசை சுட்டு, தக்காளி கடைசல் மற்றும் தேங்காய் சட்னியுடன் பறிமாறவும்.
விருப்பப்பட்டால் பொடியாக நறுக்கிய வெங்காயம் , பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்தமல்லி தழை சேர்த்து செய்யலாம்.
இதே முறையில் கம்பு மாவிலும் செய்யலாம்.