FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: StasH on September 14, 2014, 12:19:33 PM
-
என் உலகம் சிறியதுதான்
எனினும் அதில் இருக்கின்றது
என் சிறகுகள் வாழ்வதற்கு போதுமான
ஒரு சிறு வானம்…
உங்கள் பிரபஞ்சம் மிகப் பெரியது
ஆயினும்
அட்டவணையிட்டு ஒரே வட்டப்பாதையில்
சுற்றிவரும் கோளினுடையது போன்றது
உங்கள் இருத்தல்…
-
அழகான கவிதை... :) உண்மையில் உங்கள் உலகம் சிறியதுதான் ! :)
முதலில் எனது வாழ்த்துக்கள் நண்பா... :)
இது என் தொலைந்துபோன உலகம்
அழகான சின்னஞ்சிறு வீடு!
வீட்டின் பின் வாசலில் கிணறு!
கிணற்றில் நிரம்பி ததும்பும் நீர்!
இரவில் நீரில் சிறைப்படும் வெண்ணிலவு!
ஜோவென்று கொட்டி தீர்க்கும் மழை!
மழை நீரில் விடும் காகித கப்பல்!
அம்மிக்கல், ஆட்டுக்கல், உலக்கை
புடைக்கும் முரம், ஹரிக்கேன் விளக்கு, மண்பானை
பரண்மேல் தூங்கும் நடைவண்டி
அடிக்கடி நின்றுபோகும் சுவர் கடிகாரம்!
கனமில்லாத புத்தக மூட்டை
அதற்குள் பத்திரமாய் படுத்துறங்கும்
நடராஜ் அல்லது காமெல் பெட்டி
குட்டி போடும் என்று புத்தகத்துள்
ஒளித்து வைத்திருக்கும் மயில் இறகு!
அதை ரகசியமாய் திறந்து பார்த்து
பிறகு ஏமாந்து மூடும் அசட்டுத் தனம்!
பொங்கலுக்கும் புத்தாண்டுக்கும்
தேடி தேடி வாங்கும் வாழ்த்து மடல்கள்!
பால் ஐஸ்!
வண்ண வண்ண சேமியா ஐஸ்!
இரவில் மணி அடித்திக்கொண்டு வரும் குல்பி ஐஸ்!
கமர்கட், தேன்மிட்டாய்!
பஞ்சு மிட்டாய், ஆரஞ்சு மிட்டாய்!
பச்சை வண்ண காகிதத்தில் சுருட்டி மடித்த
‘நியூட்ரின்’ மிட்டாய்!
ஆஹா! இன்று நினைத்தாலும்
நாவில் இனிக்கும் அந்தச் சுவை!
விளையாட்டுகள் தான் அன்று எத்தனை! எத்தனை!
‘ஐஸ்பாய்’ என்று சொல்லும் கண்ணாமூச்சு
பம்பரம், பட்டம், கில்லி, கோலி
இப்படி அடுக்கிக் கொண்டே போகும்
என் நீண்ட பட்டியல்!
மொட்டை மாடி!
குளிர்ந்த நிலா வெளிச்சம்!
சில் என்று தழுவும் தென்றல் காற்று!
எங்கேயோ தூரத்தில் ஒலிக்கும் ராஜாவின் பாட்டு!
பின்னி வைத்த கயித்துக்கட்டில்!
அதில் சாயிந்தவாறு எனை மறந்த வேலை!
முற்றும் துறந்த முனிவர் போல்
மெய் மறந்த யோக நிலை!
-
நல்ல கவிதை முயற்சி . தொடரட்டும் உங்கள் கவிப்பயணம்.