FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on September 13, 2014, 07:41:54 PM

Title: ~ பொடுகு தொல்லைக்கு தீர்வு ! ~
Post by: MysteRy on September 13, 2014, 07:41:54 PM
பொடுகு தொல்லைக்கு தீர்வு !

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F2.bp.blogspot.com%2F-anqMlgyWXXI%2FVBQ7LCh7OgI%2FAAAAAAAAOpE%2FM5QC-y9hcQQ%2Fs1600%2FDandruff-solution.jpg&hash=e530b1e0b4ca0f58b9a53f88af1938f29e1f3d83)


கூந்தல் உதிருவதற்கான பல்வேறு காரணங்கள் இருந்தாலும் முக்கியமான ஒன்று, பொடுகு. சிலருக்கு பொடுகு காரணமாக தலையில் அரிப்பு, புண் போன்றவை ஏற்படும்.

பொடுகு தொல்லை போக சில வழிமுறைகள்:

* வால் மிளகு தூளுடன் பால் சேர்த்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் ஊறிய பின் குளித்தால், பொடுகு தொல்லை நீங்கும்.

* வேப்பிலை கொழுந்துடன், துளசி சேர்த்து நைசாக அரைத்துத் தலையில் தேய்த்து சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு தொல்லை நீங்கும்.

* வசம்பை நன்கு பவுடராக்கி, தேங்காய் எண்ணெயில் ஊற வைத்து, அந்த எண்ணெயை தினமும் தலையில் தேய்த்து வந்தால் பொடுகு மறைந்து போகும்.

* எலுமிச்சம் பழச்சாற்றுடன், தேங்காய் எண்ணெய் கலந்து தலையில் தேய்த்து வந்தாலோ அல்லது எலுமிச்சம் பழச்சாறுடன், தயிர் மற்றும் பச்சை பயிறு மாவு கலந்து தலையில் தேய்த்து சில நிமிடங்கள் கழித்து சீயக்காய் போட்டு குளித்தாலும் பொடுகு நீங்கும்.

* தேங்காய் எண்ணெயில் வெந்தயத்தை சேர்த்து காய்ச்சி, தலையில் தேய்த்து வந்தால், பொடுகு பிரச்னை நீங்கும்.

* துளசி, கறிவேப்பிலையை அரைத்து எலுமிச்சம்பழச்சாற்றுடன் கலந்து தலையில் தடவி சிறிது நேரம் கழித்து குளித்தால் பொடுகு பிரச்னை நீங்கும்.