FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on September 12, 2014, 02:13:01 PM

Title: காதல் தேன் துளிகள்
Post by: thamilan on September 12, 2014, 02:13:01 PM
உன் அம்மாவுடன் பேசும்போது
ரகசியமாய் உன்னை பார்த்து
நான் கண்ணடிக்க
நீ முகம் சிவக்கிறாய்
பார்க்க அழகாகத்தானிருக்கிறது
என்றாலும்
அது கோபத்தால் சிவந்த சிவப்பா
இல்லை
நாணத்தால் சிவந்த சிவப்பா
புரியவில்லை எனக்கு
 



நான் உரசாவிட்டாலும்
உன் துப்பட்டா உரசும்
தினமும் என்னை
நீ கடந்து செல்கையில்
 


உன்னை தெரியுமுன்பே
உன் அழகை தெரியும் எனக்கு
கொஞ்ச நேரம் மெளனித்திரு
உன் அழகுடனும்
எனை பேசவிடு
Title: Re: காதல் தேன் துளிகள்
Post by: aasaiajiith on September 13, 2014, 10:41:00 AM
படித்தேன்
ரசித்தேன்
ருசித்தேன்

ஒவ்வொரு வரிகளும்
ருசி தேன்

வாழ்த்துக்கள் !!
Title: Re: காதல் தேன் துளிகள்
Post by: thamilan on September 13, 2014, 01:28:28 PM
நன்றி அஜித்