கடவுள் காப்பாற்றுவாரா? ----- குட்டிக்கதை
(https://scontent-a-kul.xx.fbcdn.net/hphotos-xpa1/v/t1.0-9/10603608_674409649323164_5869628693284301869_n.jpg?oh=050d75e5df85c5170ab1f5fc1126ac7a&oe=54A3803D)
ஒரு ஆன்மிகவாதி ஒரு மடத்தில் உபதேசம் செய்து கொண்டிருந்தார்.
திடீரென்று அங்கிருந்த கூட்டத்தினர் அங்குமிங்கும் ஓடத் தொடங்கினர். காரணம் அருகிலிருந்த ஆற்றின் கரை உடைந்து வெள்ளம் ஊருக்குள்ளும், மடத்திற்குள்ளும் வந்து கொண்டிருந்தது.
மடத்தில் தண்ணீர் மட்டம் உயர்ந்து கொண்டிருந்தது.
அந்த ஆன்மிகவாதி, “நான் கடவுள் நம்பிக்கை உள்ளவன். கடவுள் என்னைக் காப்பாற்றுவார்” என்று சொல்லி பிரசங்கம் செய்து கொண்டிருந்தார்.
ஊர் மக்கள் ஒரு படகை அனுப்பி, “குருவே இதில் ஏறி தப்பித்து வந்துவிடுங்கள்” என்றனர்.
அதை அந்த ஆன்மிகவாதி ஏற்கவில்லை.
சிறிது நேரத்தில் மற்றொரு படகை அனுப்பி, “இதிலாவது ஏறி வந்து விடுங்கள்” என்றனர்.
அவரோ அதையும் ஏற்க மறுத்துவிட்டார்.
தண்ணீர் மட்டம் அதிகரித்து இடுப்பளவை எட்டியது.
மக்களும் குருவை எப்படியாவது காப்பாற்றிவிட வேண்டுமென்று மூன்றாவதாக ஒரு படகை அனுப்பினர்.
அந்த ஆன்மிகவாதி அந்தப் படகிலும் ஏறாமல், “கடவுள் என்னைக் காப்பாற்றுவார். அவர் என்னைக் கைவிட மாட்டார்” என்றார்.
சிறிது நேரத்தில் தண்ணீர் கழுத்தளவுக்குப் போய் நீரில் மூழ்கி இறந்து போனார்.
வரும் வாய்ப்புகளை நாம்தான் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கிடைக்கும் வாய்ப்புகளை எல்லாம் தவறவிட்டுவிட்டு பின்னர் நாம் துன்பத்தில் மூழ்கிப் போய்விடக் கூடாது.
Thanks Gab for your comment!! :) :)