FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on December 10, 2011, 04:36:15 AM

Title: முதலிரவு
Post by: Global Angel on December 10, 2011, 04:36:15 AM
முதலிரவு  


மணப்பெண்ணை
பட்டுப்புடவையால் மூடி
நெற்றி கழுத்து கை
இடுப்பு கால் முழுதும்
நகைகளால் மூடி
தலை மல்லிகையால் மூடி

கண்களில் தூக்கத்தை சுமந்து
கைகளில் வெள்ளிச்சொம்பில்
பால் சுமந்து
கற்ப்பனையில் கேள்வி சுமந்து
முதலிரவு அறைக்குள் அவள்

பட்டு வேட்டி
பட்டு முழுக்கைச்சட்டை
வழு வழுக்க
புது உள்ளாடை " இருக்க "
பெண்வீட்டு மோதிரம்
மாமன் மோதிரம்
அக்காள் போட்ட சங்கிலி
கௌரவ சாங்கிலி
மோதிரங்களும் கனக்க
முதலிரவு அறைக்குளே அவன்

தூக்கம் கண்ணை இருக்க
இன்றைக்கு தூங்கி நாளை
பார்ப்போம் என நினைத்து

பொழுது விடிந்தவுடன்
வெளியே காத்திருக்கும்
பெண்கள் கூட்டம்
முதலிரவின் நியாயம் தீர்க்க
தன் அக்காவின் கல்யாண
அனுபவங்கள் நினைவு வர

பால் குடித்து
விளக்கணைத்து
துகிலுரித்து
அப்பாடா ! ஒரு வழியாய்
இறுகிய உள்ளாடைகளை
களைந்தெறிந்து
இயந்திரம் போல்
தூக்கத்தில் ...........
காரியம் முடித்து

காலை அத்தை மாமி
சித்தி அண்ணி என
வந்திருந்த பெண்கள் கூட
மணப்பெண்ணை சுற்றி
சுற்றி பேசி முடித்து

ஏதோ முடிவுக்கு வந்து
' சந்தோஷமா இருந்தியா ' என்று
ஒரு கிழவி கேட்டக்க
ஒன்றுமே புரியாமல்
விழித்தாள் மணப்பெண்

என்னடா மச்சான்
எல்லாம் நல்லா இருந்திச்சா
என்றான் அக்காவின் கணவன்
எதை கேட்டார் என்று
விழித்தான் மணமகன்
.

padiththu siriththathu  ;D ;D
Title: Re: முதலிரவு
Post by: RemO on December 11, 2011, 07:05:42 PM
:D :D ithuku ena comment podanu theriyala