FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on September 07, 2014, 08:45:46 PM

Title: ~ அறுவதா செடியின் மருத்துவ குணங்கள்:- ~
Post by: MysteRy on September 07, 2014, 08:45:46 PM
அறுவதா செடியின் மருத்துவ குணங்கள்:-

(https://fbcdn-sphotos-e-a.akamaihd.net/hphotos-ak-xpf1/v/t1.0-9/s851x315/10370887_789956507693333_4684670184649549889_n.jpg?oh=fcf486784d9c9c304a4f7114362345ea&oe=54A410E8&__gda__=1418863701_ff1de362b7305c85afea8b7b3113af2d)


மலைப்பாங்கான இடங்களில் வளரும் மணமுடைய பசுமையான குறுஞ்செடி. சதாப்பு இலை என்றும் வழங்கப் பெறும். இதன் இலை மருத்துவப் பயனுடையது.

வலி போக்குதல், வெப்பமுண்டாக்கல், கோழையகற்றுதல், மாதவிலக்கு உண்டாக்குதல் ஆகிய மருத்துவ குணங்களை உடையது.

1. இலைச் சாற்றில் 10 துளியைத் தாய்ப்பாலுடன் கலந்து சிறுகுழந்தைகளுக்குக் கொடுக்க சளியை வெளியேற்றி காய்ச்சல் இசிவு ஆகியவற்றைப் போக்கும்.

2. இலையுடன் கால் பங்கு மஞ்சள் சேர்த்து அரைத்துக் குழந்தைகள் உடலில் பூசிக் குளிப்பாட்டி வர சளி, நீர்க்கோவை முதலிய குளிர்ச்சி நோய்கள் வராமல் தடுக்கும்.

3. இலையைப் பொடித்து வைத்துக் கொண்டு வயதிற்கு ஏற்ப 1/4 முதல் 1 தேக்கரண்டி வரை தேனில் குழைத்துக் கொடுத்து வர வயிற்றுப் பொருமல், வயிற்றுவலி, செரியாமை, நாட்பட்ட மார்புச்சளி, பால்மாந்தம், மாந்த சுரம், கணை, வயிற்றுப் போக்கு ஆகியவை தீரும்.

4. உலர்ந்த இலையை நெருப்பிலிட்டு வரும் புகையை மென்மையாகச் சுவாசிக்க இருமல் தணியும்.