FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on December 10, 2011, 04:31:29 AM
-
சுமைதாங்கி
உடலில் இளமை சுமந்து
நெஞ்சில் காதல் சுமந்து
உதட்டில் புன்சிரிப்பு சுமந்து
கண்ணில் ஏக்கம் சுமந்து
காதில் வசை சுமந்து
வயிற்றில் கரு சுமந்து
பெற்றபின் இடுப்பில் சுமந்து
வளர்ந்தபின் மார்பில் சுமந்து
மணமுடிந்த பின்னே
மனதில் சுமந்து
வயதான காலத்தில்
முதுமை சுமந்து
உயிர் காற்று பிரிந்த
பின்னே
எட்டு கைகள் சுமந்து
மண்படுக்கை மீதுறங்க
சுமைதாங்கிகளின்
சுமைதாங்கியாய்
பூமாதேவி.........
rasithathu
-
nalla kavithai naanum rasiththen