FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on August 31, 2014, 08:46:26 PM

Title: ~ ஈஸியா செய்யலாம் யோகா - விபரீத சலபாசனம் ~
Post by: MysteRy on August 31, 2014, 08:46:26 PM
ஈஸியா செய்யலாம் யோகா - விபரீத சலபாசனம்

திரைப்படங்களில்... இரு கைகளையும் கால்களையும் நேராக நீட்டி, ஜெட் விமானம் போல சூப்பர்மேன் பறப்பார். அதுபோன்ற நிலையில் இருக்கும் ஆசனம், விபரீத சலபாசனம்.

பெயரைப் பார்த்து பயப்படாதீர்கள். சலபாசனம் என்றால், வெட்டுக்கிளியைப் போன்று இருப்பது என்று பொருள்.  இந்த ஆசனத்தைச் செய்ய சொல்லித்தருகிறார், யோகா டீச்சர் விஜயா ராமச்சந்திரன்.

செய்முறை:
முதலில் கால்களை மடக்கி, வஜ்ராசன நிலையில் உட்காரவும்.
அப்படியே முன்பக்கமாகக் குனிந்து, பிறகு ஒவ்வொரு காலாக நீட்டி, குப்புறப் படுக்கவும். கை மற்றும் கால்கள், உடலோடு ஒன்று சேர்ந்து இருக்க வேண்டும்.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Fchutti%2F2014%2F09%2Fmqytji%2Fimages%2Fch34a.jpg&hash=d9b90039bc0b76a892f99ef653917d7f53bfc892)

இப்போது, இரு கைகளையும் முன் நோக்கி நீட்டி, சற்று மேலே தூக்கவும்.
பிறகு, இரு கால்களையும் சேர்த்து, மெதுவாக மேலே தூக்கவும்.
பறக்கும் நிலை இதுதான். இதே நிலையில், 10 எண்ணிக்கை வரை இருக்கவும். சிறிது ஓய்வு எடுத்து, மீண்டும் 10 எண்ணிக்கை என ஐந்து முறை செய்யவும்.

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Fchutti%2F2014%2F09%2Fmqytji%2Fimages%2Fch34b.jpg&hash=92d3bc393e2a1df40032766d562132c23bb16d4b)

பலன்கள்:
கல்லீரல், மண்ணீரல் வலுப்பெறும்.
பகல் தூக்கத்தைத் தடுக்க நல்ல ஆசனம்.
ரத்தத்தில் சிவப்பு அணுக்கள், வெள்ளை அணுக்கள் ஆகியவை சரியான அளவில் இருக்க உதவி செய்து, ரத்த ஓட்டத்தை சீர் செய்யும்.