FTC Forum

தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on August 29, 2014, 10:41:03 PM

Title: காதல் ஒரு கண்ணாமூச்சி விளையாட்டு
Post by: thamilan on August 29, 2014, 10:41:03 PM
காதல் தோல்வி
எனக்கு மட்டும் தானா
பாருங்கள் அந்த அலைகளை
எத்தனை ஆவலுடன்
கரைக்கு தாவி வந்து
காதலுடன் தட்டித் தழுவி
ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறதே
என்றாலும் அந்த அலைகளின்
காதல் ஈரம் இன்னும்
மணல்களில் ஒட்டிகொண்டிருகிறதே
உன் மனதிலோ
என்காதல் இருந்த சுவடே இல்லாமல்
அழித்து விட்டாயே

அன்று
உன்காதல் கிடைகாதா என
தூக்கத்தை தொலைத்த இரவுகள் பல
இன்று
உன்காதலை மறக்கமுடியாமல்
தூக்கத்தை தொலைத்த இரவுகள்
பலப்பல

காதலித்துப் பார் நீ
கவிஞன் ஆவாய் என்றான்
கவிஞன் வைரமுத்து
நானும் காதலித்தேன்
கவிஞன் ஆனேன்
காதல் தோல்வி என்னை
கவிஞன் ஆக்கியது

காதலித்துப் பார்
முதுமையிலும் இளமை ஆவாய்
என்றான் அதே கவிஞன்
நானும் காதலித்தேன்
உன்னை காதலித்ததின் பலன்
தாடி வளர்ந்து தலைமுடி வளர்ந்து
இளமையிலும் முதுமையாக தெரிகிறேன்

காதல் ஒரு
கண்ணாமூச்சி விளையாட்டு என்பார்கள்
உண்மை தான்
நான் உன்னை தொலைத்து விட்டு
தேடி அலைகிறேனே