FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on August 28, 2014, 09:07:43 PM

Title: ~ தாம்பூல ரகசியம் - 'வெற்றி' இலை! ~
Post by: MysteRy on August 28, 2014, 09:07:43 PM
தாம்பூல ரகசியம் - 'வெற்றி' இலை!

(https://scontent-a-kul.xx.fbcdn.net/hphotos-xpa1/t1.0-9/p526x296/10628480_690712021010097_3231451025725146192_n.jpg)


வெற்றிலை பாக்குகளைக் கூட்டி குறைத்து சாப்பிடும்போது பல்வேறுபட்ட நோய்கள் நீங்கும்.

* மலச்சிக்கல் பிரச்னை உள்ளவர்கள்... காலையில் பாக்கு அதிகமாகவும், வெற்றிலை சுண்ணாம்பு குறைவாகவும் மெல்லவேண்டும். இதனால் மலச்சிக்கல் நீங்கி, இரண்டு முதல் நான்கு முறை பேதியாகலாம்.

* பசியே இல்லாதவர்கள் மதிய உணவுக்குப் பிறகு, சுண்ணாம்பு சிறிது அதிகமாகவும், வெற்றிலை பாக்கு குறைவாகவும் மென்றால் நன்றாகப் பசி எடுக்கும்.

* வாய்ப்புண், வயிற்றுப்புண், வாயில் துர்வாடை பிரச்னை உள்ளவர்கள், மாலையில் வெற்றிலை அதிகமாகவும், பாக்கு சுண்ணாம்பு குறைவாகவும் மெல்லலாம்.

ஒரு கவுளி வெற்றிலை என்பது நூறு வெற்றிலை. ஒரு கட்டு என்பது ஆயிரம் வெற்றிலை.