FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on August 27, 2014, 09:18:46 PM
-
பஞ்சாபி சிக்கன் மசாலா
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Faval%2F2014%2F09%2Fyzuzyz%2Fimages%2Fp117b.jpg&hash=97c87c7a7a65ddfeae008bc2400e9c64d6a894f8)
தேவையானவை:
சிக்கன் - 500 கிராம்,
வெங்காயம் - 2,
இஞ்சி - சிறிய துண்டு,
பூண்டு - ஒன்று,
தக்காளி - 2,
சீரகம் - ஒரு டேபிள்ஸ்பூன்,
பட்டை, லவங்கம் - தலா 2,
மல்லித்தூள் - 2 டீஸ்பூன்,
தனி மிளகாய்த்தூள் - 2 டீஸ்பூன்,
முந்திரிப் பருப்பு - 10,
தேங்காய்த் துருவல் - ஒரு டேபிள்ஸ்பூன்,
வெண்ணெய் - கால் கப்,
தயிர் - அரை கப்,
சர்க்கரை - ஒரு டீஸ்பூன்,
புதினா, கொத்தமல்லி - சிறிதளவு,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
வெங்காயம், தக்காளி, இஞ்சியை நறுக்கிக்கொள்ளவும்.
முந்திரிப் பருப்பை அரைத்து, சிறிதளவு உப்பு சேர்த்து சிக்கன் துண்டுகளோடு ஊறவைக்கவும்.
தேங்காய்த் துருவலை தனியாக அரைக்கவும்.
தனி மிளகாய்த்தூள், மல்லித்தூள், சீரகம், பாதியளவு வெங்காயம் ஆகியவற்றைச் சேர்த்து நைஸாக அரைக்கவும்.
பூண்டை தனியாக அரைத்து தயிரில் கலக்கவும்.
குக்கரில் வெண்ணெய் விட்டு, உருகியதும் சர்க்கரை சேர்த்து பட்டை, லவங்கம் தாளித்து, மீதியுள்ள வெங்காயத்தை சேர்த்து வதக்கி, இஞ்சி, தக்காளி சேர்த்து மேலும் வதக்கவும்.
பிறகு, அரைத்த தேங்காய் விழுது, பூண்டு விழுது, வெங்காய மசாலா விழுது சேர்க்கவும்.
இதனுடன் ஊறிய சிக்கன் துண்டுகள், தேவையான உப்பு, 2 கப் தண்ணீர் சேர்த்து, குக்கரை மூடி, 2 விசில் வந்ததும் இறக்கவும்.
புதினா, கொத்தமல்லியை மேலே தூவி... சாதம், நாண், ரொட்டியுடன் பரிமாறவும்.