FTC Forum
தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Global Angel on December 09, 2011, 04:32:38 AM
-
உண்மையாக வாழ முடியுமா
உண்மையாக வாழ விரும்புவதென்பது என்னை போன்ற சிலருக்கு விருப்பம்தான் ஆனால் அப்படி வாழ முடியுமா என்றால் இல்லை என்றே சொல்ல வேண்டும்.
மனதில் உள்ள எல்லா வித எண்ணங்களையும் அப்படியே பேசி வாழ ஆசைபடுவதால் பிரயோஜனம் ஒன்றும் இல்லை, பிறர் எண்ணங்களையும் எதிர்பார்ப்புகளையும் நாம் திருப்தி படுத்துபவராக இருந்தால் மட்டுமே நல்லவர் என்ற பெயர் கிடைக்கிறது, நமது உள்ளத்தில் எது தோன்றுகிறதோ அதன் படி வாழும் போது மற்றவர்கள் நம்மை அருவருப்புடன் நினைப்பதும் நம்மை பற்றி தவறாக எடை போடுவதும் தான் மிச்சம்.
எந்த சூழலிலும் அந்த சூழலுக்கேற்ப தம்மை மாற்றி கொண்டு வாழ்பவரை தான் உலகம் ஏற்று கொள்ளுகிறது. ஒருவரை அவரது உண்மையான குணத்துடன் வாழ விடுவதில்லை.
உண்மையாக வாழ விரும்புவது நமது குணமாக இருந்து விட்டால் வேறு வினையே தேவை இல்லை, நம்மை வேற்று கிரக மனிதர்களை போல பார்க்கிறது நம்மை சுற்றி இருக்கும் சமுதாயம். அல்லது பைத்தியக்காரன் என்ற கிண்டலுக்கும் கேலி பேச்சுக்கும் ஆளாக வேண்டியதாகி விடுகிறது.
உண்மையை யாரும் ஏற்றுக் கொள்ள தாயாரில்லை, ஷேக்ஸ்பியர் சொன்னது போல ' நாடகமே உலகம் அதில் நாமெல்லாரும் நடிகர்கள் ' என்பது போல.
மனிதர்களுக்கு உலகம் கொடுத்துள்ள சுதந்திரம் இவ்வளவுதான், மிருகங்களும் பறவைகளும் எத்தனை உண்மையாக வாழுகிறது ஆறறிவு படைத்த மனிதன் மட்டும் எல்லாவற்றிலும் விதி விலக்கு தான். பொய்மை நிறைந்த உலகம். பொய்மையை வரவேற்கும் உலகம். நிஜங்களை ஏற்று கொள்ள முடியாத உலகம்