FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: Global Angel on December 09, 2011, 03:59:32 AM

Title: புதிய கண்டுபிடிப்பு.....
Post by: Global Angel on December 09, 2011, 03:59:32 AM
புதிய கண்டுபிடிப்பு.....  


அலெக்சாண்டர் பர்கேன்சே என்பவரால் 1862 ஆம் ஆண்டு கண்டுபிடிக்கப்பட்ட பிளாஸ்டிக் கண்டு பிடித்தவரின் பெயராலேயே பர்கேன்சே என்று அழைக்கப்பட்டது. செல்லுலோஸ் என்ற வேதியல் பொருளிலிருந்து எடுக்கப்பட்ட ஆர்கானிக் பொருள் தான் பிளாஸ்டிக்.

முதன் முதலில் 1868 ஆம் ஆண்டு யானையின் தந்தத்திலான பில்லியர்ட் பந்துகளுக்கு பதிலாக பிளாஸ்டிக் பில்லியர்ட் பந்துகளை உருவாக்க இயற்க்கை வேதியல் பொருட்களின் மூலம் உருவாக்கிய பிளாஸ்டிக் பந்துகள் தான் முதல் பிளாஸ்டிக் பொருள், ஆனால் இதனை செல்லுலாய்டு என்று தான் அழைத்தனர். அடுத்ததாக ஸ்டில் போடோக்ராப் பிலிம், இதை பிளாஸ்டிக் என்று கூறாமல் செல்லுலோஸ் என்ற வேதியல் பொருளில் இருந்து எடுக்கப் பட்டதால் செல்லுலாய்டு பிலிம் என்று சொல்லப்பட்டது, 1900 ஆம் வருடம் ஜான் வெஸ்லி என்பவர் சினிமா தயாரிக்கும் பிலிம் சுருள்களை தயாரித்தார்.

1897 ஆம் ஆண்டு முதன் முதலில் செல்லுலோஸ் நைட்டிரைட்டை முன்னேறிய டெக்னாலஜியின் உதவி கொண்டு முதல் முதலில் தயாரிக்கப்பட்டது கரும்பலகைகள் இதனை பிளாஸ்டிக் என்று சொல்லப்பட்டது. 1978 ஆம் ஆண்டுமுதல் பாலிதீன் வெகுவாக மார்கெட்டில் நிறையத் தொடங்கியது.

பாலிதீனின் உபயோகமும் கூடிக்கொண்டே போனது, ஆனால் ஒரு கட்டத்தில் பாலிதீனை குப்பைகளில் கொட்டியபோது அது மக்காமல் இருந்ததின் மூலம் பாலிதீனின் உபயோகத்தை கட்டுப்படுத்த நடவடிக்கை கொண்டு வரப்பட்டு பின்னர் பாலிதீன் தயாரிப்பாளர்களால் நிறுத்தப்பட்டு விட்டது ( இந்தியாவில் ).

பாலிதீனை எப்படி அழிப்பது என்பது ஒரு பெரிய சவாலாக மாறியது, தீ வைத்தாலும் தீயில் கருகாமல் இருக்கும் பிளாஸ்டிக் ஒழிக்க முடியாதா என்ற போராட்டம் இருத்து வரும் இந்த காலகட்டத்தில் அமெரிக்காவில் பள்ளியில் படிக்கும் 16 வயது மாணவன் இதற்கான தீர்வு கண்டு பிடித்து சாதனை படைத்துள்ளான்.

வேதியல் பொருட்க்களின் மூலம் பாலிதீனையோ பிளாஸ்டிக்கையோ அழித்தால் அதில் வேறு ஒரு வேதியல் பொருள் உருவாகும் அது மட்டுமில்லாது அதனால் கார்பன் வெளியேற்றப்படும் போது சுற்றுப் புறச் சூழலில் கலந்து சுகாதார கேட்டை விளைவிக்கும் என்பதால் அந்த முயற்சி ஏற்கனவே கைவிடப்பட்டு விட்டது.

இந்த புதிய மாணவனின் கண்டு பிடிப்பு ஒரு நுண்கிருமி என்பதால் இதனைக் கொண்டு பிளாஸ்டிக் மற்றும் பாலித்தீன் என்ற அரக்கனை அழிக்க வழி பிறக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.