FTC Forum

Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on August 21, 2014, 07:45:40 PM

Title: ~ அம்மா ரெசிப்பி; பலம் தரும் தானியப் புட்டு ~
Post by: MysteRy on August 21, 2014, 07:45:40 PM
அம்மா ரெசிப்பி; பலம் தரும் தானியப் புட்டு

'அந்தக் காலத்தில் எங்க அம்மா தினமும் புட்டு, களி என விதவிதமாகச் செய்து தருவார். நம் அப்பா, அம்மா, தாத்தா, பாட்டிகளின் ஆரோக்கியத்துக்கும் உடல் வலுவுக்கும் காரணமே இந்த உணவுகள்தான். ஆனா காலப்போக்குில நாம இதையெல்லாம் விட்டுட்டு் வேற உணவு வகைகளைச் சாப்பிட்டோம். உடல்நலனையும் இழந்துட்டோம்''  என்று சொல்லும் திருநெல்வேலியைச் சேர்ந்த பாப்பா நல்லபெருமாள், தானியப் புட்டு செய்யும் முறையை விவரிக்கிறார்.   

(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Fdoctor%2F2014%2F09%2Fnuowez%2Fimages%2Fp37.jpg&hash=fc8823ee9738569a032d9ea0764d793b9ba6f945)

தேவையானவை:
கம்பு, கேழ்வரகு, சம்பா கோதுமை, சம்பா சிவப்பு அரிசி  தலா 2 ஆழாக்கு, தினை  1 ஆழாக்கு, பால்  சிறிதளவு, சுக்கு  ஒரு துண்டு, ஏலக்காய்  10, தேங்காய்  1, பனை வெல்லம் (கருப்பட்டி)  தேவையான அளவு, உப்பு  சிறிதளவு.

செய்முறை: 

தானியங்களைத் தனித்தனியாக, சற்று வாசனை வரும்வரை வறுக்கவும். பிறகு மெஷினில் கொடுத்து அரைத்து சிறிது பால், சிட்டிகை உப்புத்தூள் கலந்து பிசைந்து தேங்காயைத் துருவி லேசாக வறுத்து, பிசைந்த மாவுடன் கலக்கவும். இட்லித் தட்டில் துணி போட்டு மாவை வைத்து, 15 நிமிடம் வேகவைத்து, ஆறியதும் உதிர்க்கவும். கருப்பட்டியைத் தட்டி, சிறிது நீர் விட்டுக் கரைத்து வடிகட்டி, அடுப்பில் வைத்து பாகுபோல் கெட்டியாகக் காய்ச்சவும். இதை, வேகவைத்த மாவில் கொட்டி சுக்கு, ஏலக்காயை பொடித்துப் போட்டு கையால் தேய்த்து நன்கு கலக்கவும். இப்போது சூடும் சுவையும் நிறைந்த சத்தான புட்டு ரெடி.

சோஃபியா, டயட்டீஷியன்: நார்ச்சத்துடன், நுண்ணூட்டச் சத்துகள் (Micro nutrients) அதிக அளவு கிடைக்கும். சிவப்பு அரிசியில் பி காம்ப்ளக்ஸ் வைட்டமின், கேழ்வரகில் கால்சியம், புரதம், தாது உப்புக்கள் என உடலுக்குத் தேவையான அனைத்து சத்துக்களும் கிடைக்கும். அனைவருமே இ்தை காலை உணவாக சாப்பிடலாம்.