FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on August 17, 2014, 08:33:37 PM
-
ராகி மில்க் ஷேக்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2Fwww.vikatan.com%2Faval%2F2014%2F08%2Fmjcyod%2Fimages%2Fp131.jpg&hash=5825d7f2ebdb4ed6a7c03080a0fbb3ae7d142ed0)
தேவையானவை:
ராகி மாவு - 100 கிராம், பால் - ஒரு லிட்டர் (காய்ச்சி ஆறவைத்தது), பொடித்த சர்க்கரை - 150 கிராம், இஞ்சி - மிகச் சிறிய துண்டு, பாதாம், பிஸ்தா, முந்திரி (சேர்த்து) - 50 கிராம் (சூடான நீரில் ஒரு மணி போட்டு வைத்து, விழுதாக அரைக்கவும்), எலுமிச்சைச் சாறு - கால் டீஸ்பூன், சீவிய முந்திரி - பிஸ்தா - 10 கிராம்.
செய்முறை:
ராகி மாவை சுடுநீரில் சேர்த்து, மாவு பதத்தில் கலக்கி, மூடி வைக்கவும். பின்னர் பொடித்த சர்க்கரை, இஞ்சி, பால் மூன்றையும் மிக்ஸியில் நுரை வரும் வரை அடிக்கவும். இதனுடன் எலுமிச்சைச் சாறு, கலக்கி வைத்த ராகி மாவு மற்றும் பாதாம் - பிஸ்தா - முந்திரி விழுது சேர்த்துக் கலந்து, மறுபடியும், நுரை வரும் வரை அடித்து நீளமான டம்ளரில் ஊற்றி சீவிய முந்திரி, பிஸ்தா தூவி அலங்கரித்து, ஃப்ரிட்ஜில் வைத்து எடுத்து பருகலாம்.
குறிப்பு: இது வயதானவர்களுக்கு மிகவும் ஏற்ற பானம். அவர்களுக்கு ஃப்ரிட்ஜில் வைக்காமல் அப்படியே கொடுக்கலாம். ஒல்லியாக இருப்பவர்கள், இந்தப் பானத்தை தொடர்ந்து பருகினால், சதைபோடுவார்கள்.