FTC Forum

Special Category => மருத்துவ மற்றும் அழகுக் குறிப்புகள் - Health & Beauty => Topic started by: MysteRy on August 15, 2014, 08:23:34 PM

Title: ~ ஆரைக்கீரை அல்லது ஆலக்கீரையின் மருத்துவ குணகங்கள்:- ~
Post by: MysteRy on August 15, 2014, 08:23:34 PM
ஆரைக்கீரை அல்லது ஆலக்கீரையின் மருத்துவ குணகங்கள்:-

(https://scontent-a-sin.xx.fbcdn.net/hphotos-xfp1/v/t1.0-9/p320x320/10385289_780160338672950_7316127258524368081_n.jpg?oh=42ef431494f8d763a878f71ccc5bf446&oe=54687209)


செங்குத்தாக வளர்ந்த தண்டில் நான்கு கால்வட்ட இலைகளைக் கொண்ட மிகவும் சிறிய நீர்த் தாவரம். கீரையாகச் சந்தையில் ஆரைக்கீரை அல்லது ஆலக்கீரை என்ற பெயரில் விற்பனைக்கு வருவதுண்டு. தமிழகமெங்கும் நீர்நிலைகளிலும் வாய்க்கால்களிலும் தானே வளர்வது. இலை மருத்துவப் பயனுடையது.

வெப்பம் நீக்கித் தாகம் தணிக்கும் செய்கையுடையது.

1. கீரையைச் சமைத்துண்ணத் தாய்ப்பால் சுரப்பை நிறுத்தும்.

2. கீரையைச் சமைத்துண்ணப் பகுமூத்திரம் போகும்.

3. இலையை நிழலில் உலர்த்திப் பொடி செய்து 30 கிராம் தூளை அரை லிட்டர் நீரில் போட்டுப் பாதியாகக் காய்ச்சி, பாலும், பனங்கற்கண்டும் கலந்து காலை, மாலை பருகி வரப் பகுமூத்திரம், அதிதாகம், சிறுநீரில் இரத்தம் போதல் ஆகியவை தீரும்.