FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: thamilan on August 15, 2014, 06:03:02 PM
-
ஒரு மத்தாப்பு மாலையிலே
மழைச்சாரலுடன் குளிர்காற்று
கூடல் புரியும் வேளையிலே
தனித்திருந்தேன்
அவள் நினைவுடன்
என் அறை ஜன்னல் அருகே
மழைத் துளிகள்
கண்ணாடி ஜன்னல்களில்
எழுத்திச் சென்றன அவள் பெயரை
மெதுவாக ஜன்னல் கதவைத் திறந்தேன்
மழைச் சாரல்
என் முகத்தில் தெறித்தது
அந்தத் துளிகளில்
அவள் உதட்டோர ஈரம் தெரிந்தது
அவளை முத்தமிட்டு வந்த
மழைத்துளிகளோ அவை
குளிர்காற்று என்
முகத்தை தழுவி சென்றது
அதில் அவள்
மேனியின் சுகந்தம் கலந்த்திருந்த்தது
அவள் மேனியை
தழுவி வந்த தென்றலோ அது
மனதில் பொறாமை எழுந்தது
ஜன்னல் கதவை
அடித்து சாத்தினேன்