FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: Global Angel on December 06, 2011, 02:37:28 AM

Title: வாழ்க்கை
Post by: Global Angel on December 06, 2011, 02:37:28 AM
வாழ்க்கை  


காதலைத்தவிர உலகத்தில் எத்தனையோ விஷயங்கள் ரசனைக்குரியதும் சிந்திப்பதற்கும் செயலாற்றுவதற்கும் இருக்கும் போது ஏன் இந்த காதலில் மூழ்கிவிடவேண்டும், காதலிக்கப்படுவதும் காதலிப்பதும் இன்பம்தான், ஆனால் அது ஒருபுதைக்குழி, அதில் சிக்கி மாண்டவர்தான் அதிகம், காதலித்து சிறப்புற வாழ்ந்தவர் உண்டோ என்று பார்த்தப் பின் தெரியும் இந்த உண்மைகள், காதலுக்கும் காமத்துக்கும் விலகி ஓடினால் நிச்சயம் வாழ்வின் பல பொக்கிஷங்களை காண முடியும்,

மனிதனுக்கு இயற்க்கை கொடுத்திருக்கும் சிறிய வாழ்க்கையில் முதற்ப்படிதான் காதலும் காமமும், இதிலேயே விழுந்து மாண்டு விட்டால் அடுத்துள்ள படிகளில் ஏறிபோகும் வாய்ப்பு இல்லாமலே போய்விடுகிறது, இதனால் வாழ்வின் பலநூதன மற்றும் அறிய விஷயங்களை தெரிந்துகொள்ளும் சந்தர்ப்பம் கிடைக்காமலே போய்விடுகிறது.

வாழ்வில் எதுவும் எப்பவும் கிடைத்துவிடுவதில்லை, கிடைத்துவிடுவதெல்லாம் நல்லதுக்கென்றும் இன்பமானது சாசுவதமானதும் இல்லை. கிடைத்த வாழ்வில் நாம்எதை செய்ய வேண்டும் எதை செய்யக்கூடாது என்பதை அறிந்து கொள்வதற்கே வாழ்வின் பாதிக்கும் மேற்ப்பட்ட நாட்க்களை செலவழிக்க வேண்டியுள்ளது.

அப்படி பாதி நாட்கள் கழிந்தப் பின் இருக்கும் மீதி நாட்க்களில்,கடந்த காலத்தில் நடந்ததைப் பற்றியே சிந்தித்து வீணாக்கிவிடாமல், மேற்கொண்டு என்ன செய்தால் வாழ்வின் முழுமையை காண முடியும் என்பது தான் ஓரளவு முழுமையாக வாழ்ந்து முடித்தோம் என்ற திருப்தியை கொடுப்பதாய் அமையும்.