FTC Forum
தமிழ்ப் பூங்கா => கவிதைகள் => Topic started by: Global Angel on December 06, 2011, 02:32:56 AM
-
இயற்கையே உன் மொழி என்ன
கரையை தொட்டுச் செல்லும்
அலைகள் கரைக்கு
வந்து வந்து ரகசியமாய்
சொல்லிச் செல்லும்
கதை தான் என்ன
பசுமையான வயல் வெளியில்
உரசி உரசிச் செல்லும்
காற்று சொல்லிச் செல்லும்
கதை தான் என்ன
இரு கரைகளையும்
தழுவிச் செல்லும் நதி
கரைகளுக்குச் சொல்லிச் செல்லும்
கதை தான் என்ன
வண்டுகள் மொய்க்கும் பூக்களும்
பச்சை இளம் தளிர்
சுமந்த கிளைகளும்
தலையாட்டுகின்றதே
மோதிச்செல்லும் அந்த
தென்றல் சொல்லும்
ரகசியம் தான் என்ன
தென்னங்கீத்து ஊஞ்சலிலே
சிட்டுகள் பேசும்
கதைகள் தான் என்ன
வானோடு முகில் பேசும்
கதைகள் என்ன
பச்சை வண்ண மலைகளிடம்
உரசிக்கொண்டு வேகமாய்ச்
செல்லும் வெண்மேகக் கூட்டங்கள்
சொல்லிச் செல்லும்
கதைகள் என்ன
வானிலிருந்து தரையில்
விழும் மழை நீர்
மண்ணோடு பேசும்
கதைகள் என்ன
-
ellam kaathal than :D :D