FTC Forum
Special Category => சமையல் கலசம் => Topic started by: MysteRy on August 01, 2014, 02:19:13 PM
-
கோழி பிரட்டல்
(https://friendstamilchat.in/forum/proxy.php?request=http%3A%2F%2F4.bp.blogspot.com%2F-cuvQUDfFWXk%2FU9sEMYinNtI%2FAAAAAAAAOfc%2FuSx8J1Hpyqc%2Fs1600%2F2222.jpg&hash=48b3fbead62ff8b3cd65e1f9debb4e2b277d1162)
தேவையானவை:
எலும்பு நீக்கிய கோழி - அரை கிலோ,
பெரிய வெங்காயம் - 3,
இஞ்சி - பூண்டு விழுது - 2 டீஸ்பூன்,
சோம்பு - ஒரு டீஸ்பூன்,
பட்டை - ஒரு துண்டு,
ஏலக்காய் - 2,
தயிர் - 100 கிராம்,
சிக்கன் மசாலா - 2 டீஸ்பூன்,
தனி மிளகாய் தூள் - அரை டீஸ்பூன்,
மஞ்சள் தூள் - அரை டீஸ்பூன்,
எண்ணெய் - ஒன்றரை குழிக்கரண்டி,
கொத்த மல்லித் தழை,
உப்பு - தேவையான அளவு.
செய்முறை:
கோழியை சுத்தம் செய்துகொள்ளவும். 2 வெங்காயத்தை நீளவாக்கில் மெல்லியதாக நறுக்கிக்கொள்ளவும்.
ஒரு வெங்காயத்தை மெல்லியதாக நறுக்கி பொன்னிறமாக வறுத்து, விழுதாக அரைத்துக்கொள்ளவும்.
சுத்தம் செய்த கோழி, தயிர், இஞ்சி - பூண்டு விழுது, சிக்கன் மசாலா, தனி மிளகாய் தூள், மஞ்சள் தூள், உப்பு சேர்த்து நன்றாக கலந்து அரை மணி நேரம் ஊறவைக்கவும்.
வாணலியில் எண்ணெய் ஊற்றி, காய்ந்ததும் சோம்பு, பட்டை, ஏலக்காய் தாளிக்கவும். அதில் நறுக்கிய வெங்காயம் போட்டு நன்றாக வதக்கி, ஊறவைத்த கோழி சேர்த்து மேலும் வதக்கி, மூடி போட்டு, தீயைக் குறைத்து நன்கு வேகவிடவும். பின்னர் அரைத்து வைத்த வெங்காய விழுது சேர்த்து நன்றாகக் கிளறி, தண்ணீர் முழுவதும் வற்றியபின் கறியை சுருளக் கிளறி, கொத்தமல்லி தூவி இறக்கவும்.