FTC Forum
தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: Global Angel on December 06, 2011, 02:24:33 AM
-
சீனர்களின் வினோத செய்கை !!!
சென்னையின் ஒரு மிகப் பெரிய ஷாப்பிங் காம்ப்லக்க்ஷில் இருந்த அழகு சாதனங்கள் விற்கும் கடையில் பத்து அல்லது பதினைந்து சீனர்கள் கூட்டமாக வந்திருந்தனர் அந்த கடையிலிருக்கும் அத்தனை பொருட்களும் பெண்கள் உபயோகிப்பவை. வந்திருந்த சீனர்கள் அங்கு இருந்த சில க்ரீம்களை பெட்டி பெட்டியாக அள்ளிக்கொண்டதுடன் ஒரு அலமாரியில் அடுக்கி வைக்கப்பட்டிருந்த ஷாம்பூ பாட்டில்களை தட்டி கவிழ்த்து கடையிலிருந்த அத்தனைப் பேரின் கவனத்தையும் திசை திருப்பினர்.
இந்த செயல் இவர்களை பற்றிய சந்தேகத்தை ஏற்ப்படுத்தியது, அவர்கள் வாங்கி செல்லும் க்ரீம்களை வேண்டுமானால் அவர்கள் நடத்தும் அழகுநிலையங்களுக்காக இருக்கும் என்று நினைக்கலாம் ஆனால் அவர்கள் தட்டிவிட்ட ஷாம்பூ பாட்டில்கள் எதற்காக என்று புரியவில்லை.
வெளிநாட்டினரை கண்டாலே தவறாக நினைக்கும் நம்ம ஊர் ஆசாமிகளுக்கு இதுவரையில் சீனர்களின் மீதும் ஜப்பானியர்கள் மீதும் ஏனோ கரிசனம் மிகுந்தும் அல்லது அவர்களை மட்டும் சந்தேக பார்வை பார்க்கத் தோன்றாமல் இருக்கும் காரணம் தான் என்னவோ தெரியவில்லை.
எந்த புத்தில் எந்த பாம்பு இருக்கும் என்பது யாருக்கும் தெரியாதே !!!
அஜாக்கிரதை என்பது பிரச்சினையை ஏற்ப்படுத்த உதவும், ஜாக்கிரதை என்பது பிரச்சினைகளை தவிர்க்க உதவும் !!!