FTC Forum

தமிழ்ப் பூங்கா => பொதுப்பகுதி => Topic started by: MysteRy on July 27, 2014, 09:18:02 PM

Title: ~ ஊதாப்பிட்டத் தேன்சிட்டு பற்றிய தகவல்கள்:- ~
Post by: MysteRy on July 27, 2014, 09:18:02 PM
ஊதாப்பிட்டத் தேன்சிட்டு பற்றிய தகவல்கள்:-

(https://scontent-b-lax.xx.fbcdn.net/hphotos-xpf1/t1.0-9/p235x350/10414579_647532495344213_1202571539741884576_n.jpg)


ஊதாப்பிட்டு தேன்சிட்டு அல்லது ஊதாப்பிட்டத் தேன்சிட்டு (பர்பல்-ரூம்பேட் ஸந்‌ப்ர்ட்) என்பது இந்திய உபகண்டத்திலுள்ள ஒரு தேன்சிட்டு வகை பறவை. ஏனைய தேன்சிட்டுக்களைப் போன்று இவை சிறிய அளவான பறவையாகும். உணவாக மலர்த்தேனையும் சிலவேளைகளில் சிறிய பூச்சிகளையும், குறிப்பாக குஞ்சுகளுக்குக் கொடுக்கின்றன. இவற்றின் கூடு தொங்கும் பை போன்ற அமைப்பையுடையது. இது ஒட்டடை, மரப்பாசி மற்றும் தாவரப் பொருட்கள் கொண்டு செய்யப்படும். ஆண் பிரகாசமான நிறத்தைக் கொண்டும், பெண் மங்கலான மஞ்சள் மற்றும் ஒலிவ் நிறத்தையும் கொண்டு காணப்படும்.