தக்காளி மருத்துவம்:-(https://fbcdn-sphotos-c-a.akamaihd.net/hphotos-ak-xpa1/t1.0-9/1619115_770833209605663_3308721933575671283_n.jpg)
வெய்யில் காலத்தில் தக்காளியைச் சாறு பிழிந்து எலுமிச்சாறுடன் சர்க்கரை போட்டுப் பருகினால் கடுமையான உடல் வெப்பம் தணியும். இதய நோயாளிகள், ஆண்மைக் குறைவானவர்கள், உடல் பருமனாக விரும்புபவர்கள், மூளை உழைப்பு உள்ளவர்கள் இதனை அன்றாடம் உணவில் சேர்த்துக் கொள்வது மிகவும் நல்லது. இதில் வைட்டமின் ஏ, பி, சம அளவும் அதிகமான வைட்டமின் சி யும், புரோட்டீன், கொழுப்பு, கால்சியம், கந்தகம், பாஸ்பரஸ், இரும்பு சத்துக்கள் நிறைந்துள்ளன. இந்தச் சத்துக்கள் தக்காளி காயை விட பழத்தில்தான் பூரணமாக நிறைந்துள்ளன. தக்காளியை வேக வைக்காமல் பச்சையாகச் சாப்பிடும் போதே அழிவின்றி அத்தனைச் சத்துக்களும் கிடைக்கின்றன. இரத்தத்தில் அமிலம் மிகுந்தால் உடல் தகிக்கும். செரிமானம் இன்மை, நெஞ்சுகரிப்பு ஏற்படும். கல்லீரல், இரப்பை சம்பந்தப்பட்ட கோளாறுகளுக்கும் தக்காளி அருமையான மருந்தாகச் செயல்படும். கண் பார்வை வளம் பெற, பல்லுறுதி பெற இரத்தத்தில் அணுக்கள் பெருகி இரத்த உற்பத்தி சீராக, சரும நோய் நிவாரணத்திற்கும் பொதுவாக நோய் வராமல் தடுக்க தக்காளி மிகவும் உதவும். தக்காளிப் பழத்தினை சதையைவிட இதன் தோலில்தான் 20 மடங்குக்குமேல் சத்துக்கள் உள்ளன. தக்காளியை வைத்துத் தயாரிக்கும் எந்தத் தயாரிப்பிலும் தோலை நீக்குவது சரியல்ல.