FTC Forum

தமிழ்ப் பூங்கா => இங்கு ஒரு தகவல் => Topic started by: Global Angel on December 06, 2011, 02:22:55 AM

Title: பத்தாம்பசலித்தனம்
Post by: Global Angel on December 06, 2011, 02:22:55 AM
பத்தாம்பசலித்தனம்

நெற்றியில் பொட்டும் கழுத்தில் தாலிச்சரடும் இருந்தால் மட்டுமே பொருட்களை கடையிலிருந்து வாங்க முடியுமானால் விற்ப்பனை செய்பவரை பத்தாம்பசலி என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது,

நெற்றியில் பொட்டு இல்லை என்றால் அவள் சுமங்கலி இல்லை என்ற பத்தாம்பசலிகள் பிழைக்கவும் பணம் சம்பாதிக்கவும் தேடி ஓடும் நாடு அமெரிக்கா ஐரோப்பா வளைகுடாநாடுகள்.

ஐரோப்பியர்களும் அமெரிக்கர்களும் முஸ்லீம்களும் ஒரு ரூபாய் அளவிற்கு நெற்றியில் பொட்டும் கழுத்தில் தாலிச்சரடும் அணிந்து கொண்டு வருபவர்களுக்கு வேலை வாய்ப்போ மற்ற எந்த வசதிகளும் தரமாட்டோம் என்று சொன்னால் நிலைமை எப்படி இருக்கும். உடனே பத்திரிகைகாரர்களுக்கு கொட்டை எழுத்தில் தலையங்கம் எழுதவும், மீடியாக்களுக்கு காரசார விவாதங்கள் நடத்தவும் வாய்ப்பு கிடைக்கும்.

ஆனால் இங்கு நிலைமை தலைகீழாக உள்ளது, நெற்றியில் பொட்டு இல்லாமல் போனால் வாங்க போன பொருள் விற்ப்பவன் நெற்றியில் பொட்டும் கழுத்தில் தாலியும் இருக்கிறதா என்பதை பார்த்த பிறகு தான் பொருளை விற்பான் என்றால், காசுக்கு பொருளா பொட்டுக்கும் தாலிச்சரடுக்கும் பொருளா என்பது புரியவில்லை.

வேற்று மதக்காரர்களுக்கு நாட்டில் வாழ இடம் கிடையாது என்ற நிலை வந்தாலும் ஆச்சரியப்படுவதற்க்கில்லை என்று நினைக்கத்தோன்றுகிறது.